Home /News /sports /

IPL 2022 RCB vs LSG கோலி அடிக்கடி வீரர்களை மாற்றுவார், டுபிளெசிஸ் அப்படியில்லை - சேவாக் கருத்து

IPL 2022 RCB vs LSG கோலி அடிக்கடி வீரர்களை மாற்றுவார், டுபிளெசிஸ் அப்படியில்லை - சேவாக் கருத்து

சேவாக்  பேட்டி

சேவாக் பேட்டி

ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் இன்று ஆர்சிபி அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில் 14 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் ஆர்சிபி பிளே ஆஃப் தகுதி பெற்றது, அதற்கு டெல்லி தோற்றதும் ஒரு காரணம், உண்மையில் டெல்லி தகுதி பெறுவதை விட ஆர்சிபி தகுதி பெறுவது முறைதான்.

மேலும் படிக்கவும் ...

    இன்று எலிமினேட்டர் சுற்றில் லக்னோவை எதிர்கொள்கிறது, இந்த ஆட்டம் பொறிபறக்கும் ஆட்டமாக ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2வது முறையாக தொடர்ச்சியாக ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுகிறது. மொத்தமாக 7வது முறை பிளே ஆப் சுற்றில் ஆடுகிறது ஆர்சிபி. உண்மையில் சஞ்சய் பாங்கர் மற்றும் கேப்டன் ஃபாப் டுபிளெசிஸ் அணிக்கு ஒரு சீரான தன்மையை வழங்குகின்றனர் என்கிறார் சேவாக்.

    கிரிக்பஸ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் சேவாக் கூறும்போது, “புதிய தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் மற்றும் புதிய கேப்டன் டுபிளெசிஸ் வருகை ஆகியவை ஆர்சிபி சிந்தனைப்போக்கை மாற்றியுள்ளது. விராட் கோலி கேப்டனாக எப்படி செயல்பட்டார் என்பதை நாம் பார்த்தோம், 2-3 போட்டிகள் சரியாக ஆடவில்லை எனில் உடனே அணியிலிருந்து தூக்கி விடுவார்.

    ஆனால் சஞ்சய் பாங்கர் மற்றும் டுபிளெசிஸ் சீராக அணியை தக்கவைத்து வருகின்றனர். படிதார், அனுஜ் ராவத் தவிர வேறு யாரையும் அவர்கள் புதிதாக எடுக்கவில்லை. மோசமாக ஆடுவதால் அணியை விட்டு தூக்கியது என்பது இந்த முறை இருந்ததாகத் தெரியவில்லை.

    விராட் கோலி கேப்டனாக இருந்தால் அதாவது இந்தியர் கேப்டனாக இருந்தால் கேப்டன் சொல்வதை வீரர் கேட்டாக வேண்டும். அது போன்ற அழுத்தம் உண்டு. இந்த நிலைதான் டுபிளெசிஸ் கேப்டனாக வந்ததும் மாறியுள்ளது.

    கோலியுடனும் சஞ்சய் பாங்கர் ஒர்க் செய்திருக்கிறார், அவருடனும் உரையாடல் நிகழ்த்தியிருப்பார், அறிவுரையும் வழங்கியிருப்பார். ஆனால் இந்த முறை வேறு ஒன்றை செய்ய முடிந்துள்ளது” என்றார் சேவாக்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Lucknow Super Giants, RCB, Virat Kohli, Virender sehwag

    அடுத்த செய்தி