IND vs ENG | இஷான் கிஷனுக்கு  'ஆப்பு' ரெடி?- உலகக்கோப்பை டி20-யிலும் ஓபனிங்: விராட் கோலி தீர்மானம்

IND vs ENG | இஷான் கிஷனுக்கு  'ஆப்பு' ரெடி?- உலகக்கோப்பை டி20-யிலும் ஓபனிங்: விராட் கோலி தீர்மானம்

விராட் கோலி, ரோகித் சர்மா.

இதே போல் ஓபனிங் இறங்கி இதே பார்மை ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து உலகக்கோப்பை வரை அதை எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

  • Share this:
ஒரு புறம் இளைஞர்களின் அசாத்திய தைரியம் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூற வேண்டியது, மறுபுறம் ஒரு போட்டியில் இறக்கி விட்டு அடுத்து உட்காரவைப்பது இதுதான் கேப்டன் விராட் கோலியின் இரண்டக மனோநிலை.

டி20 கிரிக்கெட் இளைஞர்களுக்கானது. இஷான் கிஷனை களமிறக்கினார் அவரும் அற்புதமாக ஆடி அரைசதம் எடுத்தார், ஆனால் அடுத்த போட்டியில் 3ம் நிலை, அடுத்து நீக்கம். இப்போது அடுத்த கட்டமாக தானும், ரோகித் சர்மாவும் தொடர்ந்து தொடக்கத்தில் இறங்கத் திட்டமிடல். வணிக ரீதியாக டி20 பெரிய சக்சஸ். எனவே இதில் தற்போது 3 அரைசதங்களைக் குவித்தது, தொடர் நாயகன் விருது வென்றது எல்லாமே கோலியின் பிராண்ட் மதிப்பை உயர்த்தும என்று கூறப்படுகிறது.  ஐபிஎல் தொடரிலும் அதைத் தொடர்ந்து டி20-யிலும் தானே தொடக்க வீரராக இறங்கப்போவதாக கோலி தீர்மானித்து விட்டார். ரோகித் சர்மாவை முதல் 2 போட்டிகளுக்கு உட்கார வைத்ததிலும் கோலியின் பிராண்ட் வேல்யூவை அதிகரிக்கத்தான் என்று கூறப்படுகிறது.

அப்போது இஷான் கிஷனுக்கு ஆப்பு வைத்தாகிவிட்டதா? பிரிதிவி ஷாவுக்கு கதவு மூடப்பட்டதா? 3ம் நிலையை சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் என்று ரொடேட் செய்யப் போகிறாரா கோலி? ரிஷப் பந்த் சொதப்பினால் எளிதில் ராகுலை கொண்டு வந்து விடலாம். இளைஞர்கள் எப்படி தன்னம்பிக்கை பெறுவார்கள் என்ற கேள்வி எழுகிறது. இந்திய அணியை ஏதோ அவர் தனக்குச் சொந்தமான அணிபோல் உரிமையாளர் போல் சிந்திக்கிறார் போலும் கோலி. சரி போகட்டும். இது அணி நிர்வாகத்தின் கவலை.

நேற்று ஆட்டம் முடிந்து, தொடக்க வீரராக 52 பந்துகளில் பிரமாத 80 ரன்களை எடுத்த கோலி, கூறியதாவது: ஆம்! ஐபிஎல் தொடரிலும் நான் தொடக்கத்தில் இறங்கப்போகிறேன்.

நான் இதற்கு முன் பல்வேறு நிலைகளில் இறங்கியுள்ளேன். இப்போது மிடில் ஆர்டர் திடகாத்திரமாக உள்ளது. இரண்டு பெஸ்ட் வீரர்கள் டி20-யில் அதிகபந்துகளை எதிர்கொள்வதுதானே முறை. எனவே ரோகித் சர்மாவுடன் தொடக்கத்தில் இறங்குவதை கண்டிப்பாக விரும்புகிறேன்.

நாங்கள் இருவரும் சேர்ந்து ஆடி இருவரும் செட் ஆனால் நாங்கள் நிச்சயம் எதிரணிக்கு சேதங்களை ஏற்படுத்துவோம் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். இதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். எங்கள் இருவரில் ஒருவர் களத்தில் இருந்தால் மற்ற வீரர்களும் தன்னம்பிக்கை பெருகின்றனர். அவர்கள் சுதந்திரமாக ஆட முடியும். இது அணிக்கு நல்லதாக அமையும். இதையே தொடரலாம் என்று நினைக்கிறேன்.

இதே போல் ஓபனிங் இறங்கி இதே பார்மை ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து உலகக்கோப்பை வரை அதை எடுத்துச் செல்ல விரும்புகிறேன். உலகக்கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கிறது. அதனால் அதற்குள் பேட்டிங் லைன் அப் எப்படியிருக்கும் என்று இப்போதே கூற முடியாது. இன்று ஓபனிங் இறங்கியது ஒரு தந்திரமான முடிவு. கூடுதல் பவுலர் வேண்டும் என்பதால் ஒரு பேட்ஸ்மெனுக்கு பதிலாக பவுலரைத் தேர்வு செய்தோம். அது துரதிர்ஷ்டமாக ராகுலாக போய் விட்டது. கஷ்டமாகத்தான் உள்ளது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.
Published by:Muthukumar
First published: