மீண்டும் சூடுபிடிக்கும் ஆர்சிபி ஜேமிசன் - கோலி உரையாடல்- நழுவிய ஜேமிசனுக்கு சவுதி பாராட்டு

கைல் ஜேமிசன்.

ஐபிஎல் 2021-ல் ஒரு சர்ச்சை ஒன்று எழுந்தது. அதாவது கைல் ஜேமிசன், விராட் கோலி இடையே ஒரு அரட்டை ரக உரையாடல் நிகழ்ந்தது என்றும் அதில் டியூக் பந்துகளில் எனக்கு வீச முடியுமா என்று கோலி கேட்டதாகவும் அதற்கு ஜேமிசன் நழுவியதாகவும் செய்திகள் எழுந்தன.

 • Share this:
  இந்தத் தகவலை வெளியிட்ட ஆஸ்திரேலிய வீரர் டேன் கிறிஸ்டியனுக்கு ஐபிஎல் அணி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது, உள்ளே நடப்பதையெல்லாம் மீடியாவுக்கு தெரியப்படுத்தக் கூடாது இது ஒப்பந்த மீறல் என்று எச்சரித்தது.

  இந்நிலையில் கோலி விரித்த வலையில் ஜேமிசன் விழாமல் நழுவியதை நியூசிலாந்தின் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி பாராட்டியுள்ளார்.

  ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த ஆஸி. வீரர் டேன் கிறிஸ்டியன் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ஆர்சிபி அணி வீரர்கள் நாங்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம். நியூஸிலாந்து வீரர் ஜேமிஸன் தன்னுடன் 2 டியூக் பந்துகளைக் கொண்டு வந்திருந்தார். இதைப் பார்த்த கேப்டன் விராட் கோலி, தனக்கு டியூக் பந்தில் பந்துவீச முடியுமா, நீங்கள் டியூக்ஸ் பந்தில் அதிகமாக பந்துவீசியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்று ஜேமிஸனிடம் கேட்டார்.

  Read More: இங்கிலாந்து-நியூசிலாந்து முதல் டெஸ்ட்: இங்கிலாந்து ஆதிக்கம் உடையுமா?- 10 சுவாரஸ்யப் புள்ளி விவரங்கள்
   அதற்கு ஜேமிஸன், “ஆம். 2 டியூக் பந்துகளைக் கொண்டுவந்துள்ளேன்” எனத் தெரிவித்தார். அதற்கு கோலி, “எனக்கு வலைப்பயிற்சியில் டியூக்ஸ் பந்தில் பந்துவீச முடியுமா” எனக் கேட்டார்.

  உடனே ஜேமிஸன், “அதற்கு வாய்ப்பை இல்லை. உங்களுக்கு டியூக் பந்தில் பந்துவீச முடியாது” என்றார்.

  ஜேமிசன் ஏற்கெனவே நியூசிலாந்து தொடரில் இந்திய பேட்ஸ்மென்களை படுத்தி எடுத்ததையடுத்து கோலி அவரை வீசச் சொல்லி அவர் பந்து ரிலீஸ் ஆகும் தருணம், அவரது வேரியேஷன் ஆகியவற்றை கணிக்க திட்டமிட்டு இதைச் செய்தார். ஆனால் ஜேமிசன் பிடி கொடுக்கவில்லை.

  Read More:  மறக்க முடியுமா? ஜூன் 1, 2008- தோனி படைக்கு அதிர்ச்சியளித்த ஷேன் வார்ன் படை- சிஎஸ்கே கோப்பை கனவு தகர்ந்த கதை
   இது தொடர்பாக டிம் சவுதி தி கார்டியன் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


  ''ஐபிஎல் தொடரின்போது விராட் கோலி, டியூக் பந்தில் பந்துவீச கைல் ஜேமிஸனிடம் கேட்டதும், அதற்கு அவர் பந்துவீச மறுத்ததும் உண்மைதான். விராட் கோலி கேட்டதற்கு, ஜேமிஸன் எந்தவிதமான தயங்கமும் இல்லாமல், யோசிக்காமல் உங்களுக்குப் பந்துவீச முடியாது எனத் தெரிவித்துவிட்டார். விராட் கோலி விரித்த சூசகமான விலையில் கெயில் ஜேமிஸன் விழுவார் என எதிர்பார்த்தார், ஆனால், ஜேமிஸன் தப்பித்துவிட்டார்.

  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜேமிஸன் டியூக்ஸ் பந்தில் வீசும் பந்துவீச்சை கோலி எதிர்கொள்ள நேரிடும். அதற்காகவே ஜேமிஸனை பந்துவீச கோலி கேட்டுக்கொண்டார். அதை ஜேமிஸன் தவிர்த்துவிட்டார்''.

  இவ்வாறு டிம் சவுதி தெரிவித்தார்.
  Published by:Muthukumar
  First published: