ஆர்.சி.பி கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை விடுவிக்கவேண்டும் - கவுதம் கம்பீர் கடும் விமர்சனம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியை விடுவிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கட் வீரரும், எம்பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.

ஆர்.சி.பி கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை விடுவிக்கவேண்டும் - கவுதம் கம்பீர் கடும் விமர்சனம்
கோலி கம்பீர்
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரில் தொடக்கப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கோலி தலைமையிலான ஆர்.சி.பி. முதலில் விளையாடிய 10 போட்டிகளில் 7 வென்றது. அதனைத் தொடர்ந்து விளையாடிய கடைசி 4 போட்டிகளில் ஆர்.சி.பி மோசமான தோல்வியைத் தழுவியது. இருப்பினும், ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ஆர்.சி.பி. ஆனால், ப்ளேஆப் சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் ஆர்.சி.பி படுதோல்வி அடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது. அதனால், ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணியின் கேப்டனாக 8 ஆண்டுகளாக கோலி இருந்துவரும் நிலையில் ஒருமுறை கூட தொடரை வென்று சாம்பியனாக முடியவில்லை. இந்தமுறை மிகவும் எதிர்பார்த்த நிலையில், இந்த ஆண்டும் ப்ளேஆப் சுற்றில் வெளியேறியது. அதனால், கோலியில் கேப்டன்ஷிப் குறித்த விமர்சனம் எழுந்தது.

இந்தநிலையில், விளையாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த கம்பீர், ஐபிஎல் தொடரில் 8 ஆண்டுகளில் ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை கோலியால் வெல்ல முடியவில்லை எனக் கூறினார். 8 ஆண்டுகள் என்பது நீண்ட அவகாசம் எனக் கூறிய கம்பீர், வேறு எந்த கேப்டனாவது சாம்பியன் பட்டம் வெல்லாமல் 8 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பில் நீடிக்கிறார்களா என்றும் வினவினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுடன் பெங்களூர் அணி வெளியேறிய நிலையில், கம்பீர் இவ்வாறு கூறியுள்ளார். இதற்கிடையே, லீக் சுற்றில் சென்னை அணியை வீழ்த்தியபோது பெங்களூரு அணி ரசிகர்கள் வெளியிட்ட பாடலை விமர்சித்து சென்னை ரசிகர்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
First published: November 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading