முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் ஏன் திரும்பினாய்- ஷிகர் தவானுக்கு பளார் விட்ட தந்தை -வைரல் வீடியோ

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் ஏன் திரும்பினாய்- ஷிகர் தவானுக்கு பளார் விட்ட தந்தை -வைரல் வீடியோ

காமெடி வீடியோ- ஷிகர் தவானை அடிக்கும் தந்தை

காமெடி வீடியோ- ஷிகர் தவானை அடிக்கும் தந்தை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியன் பிரீமியர் லீக் 2022ல் இருந்து பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) வெளியேறிய பிறகு, மூத்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஒரு பெரும் கேளிக்கையான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

"நாக் அவுட்களுக்கு தகுதி பெறாததற்காக என் அப்பாவால் நாக் அவுட், என்று இன்ஸ்டாகிராமில் தவான் தனது பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார்.ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் பயோ பபிளில் இருந்து வெளியேறிய வீரர்கள் பலர் லைஃபை எஞ்ஜாய் செய்யத் தொடங்கினர்.  மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். சில வீரர்கள் ஆங்காங்கே சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ள நிலையில், ஷிகர் தவானை அவர் தந்தை சும்மா தமாஷுக்காக அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஷிகர் தவானை தாக்கும் தந்தை மொஹிந்தர்பால், சினிமா வில்லன்போல் தன் மகனை அடிக்கும் தமாஷுக்காக எடுக்கப்பட்ட காட்சி நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.




 




View this post on Instagram





 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)



தவானை கீழே தள்ளி எட்டி உதைக்கிறார். தவானும் அடி வாங்கிக் கொண்டு கீழே படுத்து இருக்கிறார். எதற்காக என்று விசாரிக்கும்போது, ஐபில் போட்டியில் ஒழுங்காக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் தோல்வி அடைந்துவிட்டு வீட்டுக்கு தவான் திரும்பிவிட்டதால் கோபமடைந்து அடிக்கிறாராம்.

சும்மா ஒரு காமெடிக்காக எடுக்கப்பட்ட வீடியோ இது, ஷிகர் தவான் இப்படி பல காமெடி வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ஆனால் பாவம் ஐபிஎல் பேட்டர்கள் வரிசையில் அதிக ரன்களில் 4ம் இடம் பிடித்திருந்தும் இவரை இந்திய டி20 அணியில் சேர்க்கவில்லை என்பதுதான் பரிதாபம், அதையும் மீறி அவர் இப்படி தமாஷாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

First published:

Tags: IPL 2022, Punjab Kings, Shikhar dhawan