விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் தொடரிலிருந்து கோலி, டி-வில்லியர்ஸை தடை செய்ய வேண்டும் - கே.எல்.ராகுல்

IPL 2020 | பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசையில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டி-வில்லியர்ஸ் முக்கிய வீரர்களாக உள்ளனர்.

ஐ.பி.எல் தொடரிலிருந்து கோலி, டி-வில்லியர்ஸை தடை செய்ய வேண்டும் - கே.எல்.ராகுல்
ஐ.பி.எல் 2020
  • Share this:
ஐ.பி.எல் தொடரிலிருந்து விராட் கோலி மற்றும் டி-வில்லியர்ஸ் ரெண்டு பேரையும் தடை செய்ய வேண்டுமென பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் 2020 தொடரின் இன்றைப் போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோத உள்ளன. நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளது. பஞ்சாப் அணியை பெங்களூரு வென்றால் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடிக்கும்.

அதே சமயம் பஞ்சாப் அணி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இன்றையப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடதக்கது.


பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசையில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டி-வில்லியர்ஸ் முக்கிய வீரர்களாக உள்ளனர். இவர்கள் பார்ட்னர்ஷிப் இன்றையப் போட்டியிலும் தொடர்ந்தால் பெங்களூரு அணியின் வெற்றி நிச்சயம் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நேரலையின் போது உரையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், விராட் கோலி மற்றும் டி-வில்லியர்ஸை ஐ.பி.எல் தொடரிலிருந்து தடை செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளார். 5000 ரன்கள் அடித்த பின் இவர்களை இருவரையும் வெளியேற்ற வேண்டும். அடுத்த வீரர்களுக்கு அவர்கள் வாய்ப்பளிக்க வேண்டுமென்று வேடிக்கயைாக கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading