• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஹைதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா- புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்

ஹைதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா- புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்

கொல்கத்தா வீரர்கள்

கொல்கத்தா வீரர்கள்

ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 49-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் விரித்திமான் சஹா களமிறங்கினர். சஹா ரன் ஏதும் எடுக்காமலேயே முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதனையடுத்து, கேப்டன் கேன்வில்லியம்சன் களமிறங்கினார்.

    வில்லியம்சன் நிதானமாக ஆடிவந்த நிலையில் ஜேசன் ராய் 10 ரன்களில் ஷிவம் மவி பந்தில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, பிரியம் கார்க், வில்லியம்சன் இணை நிதானமாக ஆடியது. வில்லியன்சன் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, கார்க்கும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்துல் சமத் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    கொல்கத்தா அணி சார்பில் டிம் சௌதி, ஷிவம் மவி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கொல்கத்தா அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். வெங்கடேஷ் ஐயர் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதியும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    மறுபுறம் சுப்மன் கில் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்ந்தார். கில் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ராணாவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் இணை இறுதி ஓவர் வரை ஆட்டத்தைக் கொண்டு சென்று போட்டியில் வெற்றி பெற்றன. 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: