• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டம்- 115 ரன்கள் மட்டுமே எடுத்த எஸ்.ஆர்.எச்

ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டம்- 115 ரன்கள் மட்டுமே எடுத்த எஸ்.ஆர்.எச்

கொல்கத்தா வீரர்கள்

கொல்கத்தா வீரர்கள்

கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு வெறும் 115 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 49-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

    அதனையடுத்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் விரித்திமான் சஹா களமிறங்கினர். சஹா ரன் ஏதும் எடுக்காமலேயே முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதனையடுத்து, கேப்டன் கேன்வில்லியம்சன் களமிறங்கினார். வில்லியம்சன் நிதானமாக ஆடிவந்த நிலையில் ஜேசன் ராய் 10 ரன்களில் ஷிவம் மவி பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதனையடுத்து, பிரியம் கார்க், வில்லியம்சன் இணை நிதானமாக ஆடியது. வில்லியன்சன் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, கார்க்கும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்துல் சமத் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    கொல்கத்தா அணி சார்பில் டிம் சௌதி, ஷிவம் மவி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: