• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பந்துவீச்சில் மிரட்டிய கொல்கத்தா- ராஜஸ்தானை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

பந்துவீச்சில் மிரட்டிய கொல்கத்தா- ராஜஸ்தானை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

கொல்கத்தா வீரர்கள்

கொல்கத்தா வீரர்கள்

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 54-வது போட்டியில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தனர். வெங்கடேஷ் ஐயர் 35 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ராகுல் திவாட்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து நிதிஷ் ராணா களமிறங்கினார். அவரும் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ராகுல் திரிபாதியும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய சுப்மன் கில் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

    172 ரன்கள் எடுத்தால் வெற்றி கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், லியம் லிவ்விங்ஸ்டோன் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், தொடக்கம் முதலே ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் 1 ரன்களில் ஷிவம் மவி பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

    அதனையடுத்து, லியம் லிவ்விங்ஸ்டோனும் 6 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஒற்றை இலக்க ரன்களில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். ராகுல் திவாட்டியா மட்டும் நிலைத்து ஆடி 44 ரன்களைக் குவித்தார். அவரும் 16 ஓவரில் ஷிவம் மவி பந்துவீச்சில் 44 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார்.

    அதன்மூலம் 16.1 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது கொல்கத்தா அணி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: