• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அரைசதம் அடித்த சுப்மன் கில்- 171 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி

அரைசதம் அடித்த சுப்மன் கில்- 171 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி

கொல்கத்தா வீரர்கள்

கொல்கத்தா வீரர்கள்

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்துள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 54-வது போட்டியில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தனர்.

    வெங்கடேஷ் ஐயர் 35 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ராகுல் திவாட்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நிதிஷ் ராணா களமிறங்கினார். அவரும் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ராகுல் திரிபாதியும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய சுப்மன் கில் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இறுதியாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 13 ரன்களும், இயான் மோர்கன் 14 ரன்களும் அடித்தனர். அதன்மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் கிரிஸ் மோரிஸ், சேட்டன் சக்காரியா, ராகுல் திவாட்டியா, க்ளென் ப்ளிப்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: