Home /News /sports /

IPL 2022 KKR vs RR- கடைசி 5 ஆட்டம் 5 பைனல்தான் பாத்துருவோம் வாங்க - அதிரடி மன்னன் ரஸல் சூளுரை

IPL 2022 KKR vs RR- கடைசி 5 ஆட்டம் 5 பைனல்தான் பாத்துருவோம் வாங்க - அதிரடி மன்னன் ரஸல் சூளுரை

ஆந்த்ரே ரஸல்

ஆந்த்ரே ரஸல்

ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் 2022 தொடரில் கடைசி 5 போட்டிகளில் தோற்று சொதப்பி வருகிறது, இதனால் ஷ்ரேயஸ் அய்யர் கேப்டன்சி மீது பலருக்கும் ஐயம் எழுந்துள்ளது, தொடக்க வீரர்களை செட்டில் ஆகவிடாமல் மாற்றிக் கொண்டே இருந்தால், விராட் கோலி பாணியில் செய்கிறேன் என்றால், அணி இந்த நிலைமைக்குத்தானே வரும் என்று உள்வட்டங்கள் புலம்பத் தொடங்கியுள்ளன.

மேலும் படிக்கவும் ...

    இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வாழ்வா சாவா போட்டியில் ஆடுகிறது கொல்கத்தா, இந்நிலையில் இந்தப் போட்டி குறித்த வீடியோ ஒன்றை கொல்கத்தா வெளியிட்டுள்ளது. அதில் ஆந்த்ரே ரஸல், ரசிகர்களுக்கு சூளுரைக்கின்றார். கடைசி 5 போட்டிகளும் எங்களுக்கு 5 பைனல்ஸ், பாத்துருவோம் என்கிறார். உண்மையான ரசிகர்கள் தங்கள் அணியின் இந்த கடினமான காலக்கட்டத்தில் கூட ஆதரவு தருவார்கள் என்றார்.

    “இந்த நிலையில் இருக்கும் அணியல்ல நாங்கள். விரும்பத்தகுந்த நிலையும் அல்ல இது. எந்த ஒரு அணியும் விரும்பும் உண்மையான கொல்கத்தா அணி ரசிகர்களாகிய உங்களை நம்புகிறோம். இது போன்ற கடினமான தருணங்களில் எங்கள் ரசிகர்கள் எப்படி ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் அறிவோம்.

    நான் அனைவரின் சார்பாகவும் ஒன்றைக் கூறுகிறேன். நான் இன்னும் பர்ப்பிள் கலரையும் பொன் வண்ணத்தையும் காண்கிறேன். எங்களை ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த 5 போட்டிகளிலும் கடும் சவால் அளிப்போம், போராடுவோம். இந்த 5 ஆட்டமும் 5 பைனல்கள்தான்” என்றார்.

    கொல்கத்தா தற்போது 9 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் -0.006 என்ற ரன் விகிதத்தில் சிஎஸ்கேவுக்கு சற்று மேலே 8ம் இடத்தில் உள்ளது. இன்று இரவு 7:30 மணிக்கு ராஜஸ்தானுடன் கொல்கத்தா மோதுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, KKR, Rajasthan Royals

    அடுத்த செய்தி