• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • KKR vs RCB | 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த விராட் கோலி

KKR vs RCB | 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த விராட் கோலி

விராட் கோலி(மாதிரிப் படம்)

விராட் கோலி(மாதிரிப் படம்)

ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்துள்ளார்.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 15-வது சீசனின் இரண்டாவது சுற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. நேற்றையப் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இன்றைய போட்டியில் ஆர்.சி.பி அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் டி20 போட்டியில் ஆர்சிபி அணி, பசுமைச் சூழலை வலியுறுத்தி பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கி விளையாடுவார்கள், பூமியை வெப்பமயமாக்கலில் இருந்து காப்போம், ஆரோக்கியமாக வைத்திருப்போம் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக முன்களப்பணியாளர்களின் சேவை பாராட்டத்தக்கவகையில் இருந்துவருகிறது.

    ஐபிஎல் 14-வது சீசனின் 2-ம் பகுதியில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நீல நிற ஜெர்ஸியை அணிந்து ஆர்சிபி வீரர்கள் இன்று களமிறங்கினர். விராட் கோலிக்கு கேப்டனாக இதுதான் இறுதி தொடர் என்பதால் அவருடைய பேட்டிங்கின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்தநிலையில், தொடக்க வீரராக களமிறங்கிய அவர், 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரசித் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பிரசித் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அம்பயர் அவுட் கொடுத்தார். அதில், சந்தேகம் இருந்த நிலையில் கோலி டி.ஆர்.எஸ் முறையில் ரிவியூ கேட்டார்.
    ORANGE CAP:

    PURPLE CAP:

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால், மூன்றாவது நடுவர் விராட் கோலி ஆட்டமிழந்ததை உறுதி செய்தனர். விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்தது ஆர்.சி.பி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: