• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • KKR vs RCB | பந்து வீச்சில் அசத்திய கொல்கத்தா: 92 ரன்களில் சுருண்ட ஆர்.சி.பி

KKR vs RCB | பந்து வீச்சில் அசத்திய கொல்கத்தா: 92 ரன்களில் சுருண்ட ஆர்.சி.பி

கொல்கத்தா வீரர்கள்

கொல்கத்தா வீரர்கள்

கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி 10 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்திருந்தநிலையில், இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தது. கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருக்கும்போது ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதற்கு கண்டனங்கள் எழுந்தன. மேலும், மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்தநிலையில், ஐ.பி.எல் தொடரின் 14-வது சீசனின் இரண்டாவது சுற்று நேற்று தொடங்கியது.

    ஐ.பி.எல்லில் 31வது ஆட்டம் இன்று, 20ம் தேதி அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, தொடக்க வீரர்களாக விராட் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் களமிறங்கினர். கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்களில் பிரசித் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    நிதானமாக ஆடி வந்த படிக்கல் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெர்குசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் முதல் பந்தை எதிர்கொண்டார். ஆன்ட்ரூ ரஸல் வீசிய யார்க்கர் பந்தில் போல்டாகி அதிர்ச்சியளித்தார். பெங்களூரு அணியின் முக்கிய வீரர்களான கோலி, படிக்கலைத் தொடர்ந்து ரன் ஏதும் எடுக்காமல் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

    PURPLE CAP:

    RESULT DATA:

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நேற்றைய போட்டியில் மும்பை அணியிக் கூட திவாரி 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால், பெங்களூரு அணியில் அனைத்து வீரர்களும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டநேரத்தில் 19 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே பெங்களூரு அணி எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அண்ட்ரூ ரஸல், வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: