• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • KKR vs RCB | டாஸ்வென்ற விராட் கோலி பேட்டிங் தேர்வு - வெற்றி வாய்க்குமா

KKR vs RCB | டாஸ்வென்ற விராட் கோலி பேட்டிங் தேர்வு - வெற்றி வாய்க்குமா

கொல்கத்தா, ஆர்சிபி

கொல்கத்தா, ஆர்சிபி

ஐ.பி.எல் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங்கைத்தேர்வு செய்துள்ளார்.

  • Share this:
    இந்தியன் பிரீமியர் லீகின் 31வது ஆட்டம் இன்று, 20ம் தேதி அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இதில் பெங்களூரு அணி விராட் கோலி தலைமையில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காரணம் இந்தியாவில் நடந்த முதல் சுற்றில் ஆர்சிபி அணி செம பார்மில் இருந்தது.

    பாயிண்ட்ஸ் டேபிளில் ஆர்சிபி 3ம் இடத்தில் உள்ளது. மாறாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று 7ம் இடத்தில் பின்னடைவு கண்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் இதுவரை மோதியதில் கொல்கத்தா அணியின் கை ஒங்கியுள்ளது. இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 15 முறை வென்றுள்ளது. ஆர்சிப்பி 13 முறை வெற்றி பெற்றுள்ளது.

    இந்த தொடருடன் ஆர்.சி.பி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக கோலி அறிவித்துள்ளார். எனவே, இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் கொல்கத்தா முதல்சுற்றில் 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
    SCHEDULE TIME TABLE:

    ORANGE CAP:

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா உள்ளது. இந்தநிலையில், ஆர்.சி.பி அணி கேப்டன் விராட் கோலி மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் டாஸில் கலந்துகொண்டனர். டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: