• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • KKR vs RCB | இரண்டாவது சுற்றில் கம்பேக் கொடுத்த கொல்கத்தா - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

KKR vs RCB | இரண்டாவது சுற்றில் கம்பேக் கொடுத்த கொல்கத்தா - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

வெங்கடேஷ்

வெங்கடேஷ்

பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் 14-வது சீசனின் 31-வது ஆட்டம் இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக மோசமான ஆட்டத்தை பெங்களூரு பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தினர்.

    கோலி, படிக்கல், டிவில்லியர்ஸ் என அனைவரும் மிக மோசமான முறையில் ஆட்டமிழந்தனர். 19 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக ஷப்மன் கில், வெங்கடேஷ் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

    நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் மற்றும் வெங்கடேஷ் விக்கெட் இழக்காமல் ரன்களைக் குவித்தனர். விக்கெட் இழப்பின்றி வெற்றியை நெருங்கிய நிலையில் கில் 48 ரன் எடுத்திருந்த நிலையில், சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரூ ரஸல் களமிறங்கினார்.

    POINTS TABLE:

    SCHEDULE TIME TABLE:

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரஸல் ஸ்ரைக்குக்கு வந்து பந்தை எதிர்கொள்வதற்கு முன்பே வெங்கடேஷ் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து கொல்கத்தாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்களைக் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. வெங்கடேஷ் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: