• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • KKR vs RCB | இரண்டாவது சுற்றில் மீண்டெழுமா கொல்கத்தா? கோப்பையை நோக்கி நகருமா ஆர்சிபி

KKR vs RCB | இரண்டாவது சுற்றில் மீண்டெழுமா கொல்கத்தா? கோப்பையை நோக்கி நகருமா ஆர்சிபி

கொல்கத்தா, ஆர்சிபி

கொல்கத்தா, ஆர்சிபி

ஐ.பி.எல்லின் இன்றைய போட்டியில் ஆர்.சி.பி அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

  • Share this:
    இந்தியன் பிரீமியர் லீகின் 31வது ஆட்டம் இன்று, 20ம் தேதி அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இதில் பெங்களூரு அணி விராட் கோலி தலைமையில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காரணம் இந்தியாவில் நடந்த முதல் சுற்றில் ஆர்சிபி அணி செம பார்மில் இருந்தது. பாயிண்ட்ஸ் டேபிளில் ஆர்சிபி 3ம் இடத்தில் உள்ளது. மாறாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று 7ம் இடத்தில் பின்னடைவு கண்டுள்ளது.

    ஆனால் ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் இதுவரை மோதியதில் கொல்கத்தா அணியின் கை ஒங்கியுள்ளது. இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 15 முறை வென்றுள்ளது. ஆர்சிப்பி 13 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடருடன் ஆர்.சி.பி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ளார். எனவே, இந்த தொடரில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற உத்வேகம் அவரிடம் இருக்கும்.

    எனவே, அவரிடமிருந்து மிகச் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். புள்ளிப் பட்டியலில் ஆர்.சி.பி மூன்றாவது இடத்திலிருந்தாலும் அதனுடைய ரன்ரேட் குறைவாகவே உள்ளது. தற்போதைய புள்ளிப் பட்டிகள் முதல்சுற்றில் நடைபெற்ற போட்டிகளில் அணிகள் வெற்ற பெற்றதன் அடிப்படையில் உள்ளது.

    PURPLE CAP:

    RESULT DATA:

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது போட்டியில் வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஃபார்மில் இருந்திருப்பார்கள். அதே ஃபார்மில்தான் தற்போது இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. எனவே, முதல்சுற்றில் போட்டியை வைத்து இரண்டாவது சுற்றை எடைபோடுவது கடினமே. இரண்டு அணிகளும் வெற்றி பெறுவதற்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்றைய ஆட்டம் சிறப்பாக அமையும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: