• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • KKR vs RCB, IPL 2021: டுவெண்டி20ன்னு சொல்லிட்டு 29 ஓவர்ல முடிச்சுட்டாங்க: கோலி மைன்ட் வாய்ஸ்

KKR vs RCB, IPL 2021: டுவெண்டி20ன்னு சொல்லிட்டு 29 ஓவர்ல முடிச்சுட்டாங்க: கோலி மைன்ட் வாய்ஸ்

விராட் கோலி ஆட்டமிழந்து செல்லும் காட்சி.

விராட் கோலி ஆட்டமிழந்து செல்லும் காட்சி.

அபுதாபியில் நடைபெற்ற நேற்றைய 31வது ஐபிஎல் 2021 போட்டியில் கொல்கத்தா அணி ஆர்சிபி அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டுவெண்டி 20 என்றால் 40 ஓவர் ஆடப்பட வேண்டும், 38-39 ஓவர் வரையாவது வரவேண்டும், ஆனால் மொத்தமே 29 ஓவரில் இரண்டு இன்னிங்ஸ்களும் முடிந்து விட்டன.

  • Share this:
ஆர்சிபி பேட்ஸ்மென்கள் கிரிக்கெட்டை மறந்தது போல் ஆடினர். கொல்கத்தா பவுலர்களின் துல்லியத் தாக்குதலில் திக்குமுக்காடி ஒன்றும் செய்ய முடியாமல் வழுக்கி விழுந்தது ஆர்சிபி 92 ரன்களுக்கு 19 ஓவர் எடுத்துக் கொண்டது. இலக்கை விரட்டிய கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில் பிரமாதமான ஷாட்களுடன் 48 ரன்கள் வெளுக்க, வெங்கடேஷ் ஐயர் என்ற ஒரு மத்தியப் பிரதேச மாநில இடது கை ஆல்ரவுண்டர் 27 பந்துகளில் 41 அடிக்க 10 ஓவர்களில் 94/1 என்று கொல்கத்தா வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடந்த சுற்றில் 7 போட்டிகளில் 5-ல் வென்ற ஆர்சிபியும் 7 போட்டிகளில் 5-ல் தோற்ற கொல்கத்தாவும் மோதியதில் ஆர்சிபி தான் அட்வாண்டேஜ் என்று ஊடகங்கள் எழுதின. ஆனால் நேற்று அதிர்ஷ்டங்கள் மாறியது. விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகப்போகிறேன் என்று அறிவித்திருக்கக் கூடாது, அதனால் அணிக்குள் ஒருமை குலைவு ஏற்படும் என்று அவருக்குத் தெரியவில்லை. கம்பீர் இதைத்தான் சரியாகச் சொன்னார்.

ஆர்சிபி பேட்டிங் காலியாகிவிட்டது, பேட்டிங்கே தெரியாது போல் ஆடினர். மாறாக கொல்கத்தாவின் வேகப்பந்து வீச்சுப் பிரமாதமாக லைன் அண்ட் லெந்தில் வீச ஸ்பின்னர்கள் புதிர் பந்துகளை வைத்து ஆர்சிபியை ஆட்டினர். வேகப்பந்து வீச்சாளர்கள் ரசல், பிரசித் கிருஷ்ணா வேகம் மற்றும் எகிறு பந்துகள் மூலம் பேட்ஸ்மென்களை அடடே! சொல்ல வைத்தனர். கோலி தன் முதல் பவுண்டரியை தன் ட்ரேட் மார்க் கவர் டிரைவில் அடித்தார், சரி என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் இங்கிலாந்தில் காலை வாரியது போலவே அடுத்த இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆகி வெளியேறினார், பிரசித் கிருஷ்ணா பவுலர், ரிவியூவையும் விரயம் செய்து வெளியேறினார்.

தேவ்தத் படிக்கல் 3 பவுண்டரிகளை விளாசினார், எதிர்முனையில் கே.எஸ். பரத் டைமிங் வராமல் தவித்தார். படிக்கல் லாக்கி பெர்கூசன் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேற, கே.எஸ். பரத் புல் ஷாட் கையில் போய் உட்கார்ந்தது. டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் கையில் போட்டி இருந்தது, ஆனால் ஆந்த்ரே ரசலின் கண்ணுக்கு விருந்தான லெக் ஸ்டம்ப் யார்க்கரில் டிவில்லியர்ஸ் பவுல்டு ஆனதோடு கோல்டன் டக்கில் வெளியேறினார். மேக்ஸ்வெலை சுனில் நரைன் நெருக்கினார், ஒரு பவுண்டரி கூட வராமல் 16 பந்துகளில் 10 என்று தடுமாறினார்.

Also Read: KKR vs RCB | இரண்டாவது சுற்றில் கம்பேக் கொடுத்த கொல்கத்தா - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 வருண் சக்ரவர்த்தி கிளென் மேக்ஸ்வெல் குச்சியைப் பெயர்த்தார், அடுத்த பந்தே வனிந்து ஹசரங்காவையும் வெளியேற்றினார் வருண். ஹாட்ரிக் பந்து பிளம்ப் எல்பி என்று நினைத்த போது தினேஷ் கார்த்திக் அது பேட்டில் பட்டது என்று சைகை செய்ய ரிவியூ செய்யப்படவில்லை, ஹாட்ரிக் வாய்ப்பு கைநழுவியது. யார் இந்த சச்சின் பேபி என்று தெரியவில்லை 6 பந்துகளுக்குப் பிறகு தன் முதல் ரன்னை எடுத்தார். இவரும் வருணிடம் சிக்கினார். ஜேமிசன் ரன் அவுட் ஆனார். வருண் 13 ரன்களுக்கு 3 விக்கெட் என்று முடித்தார். ரசல் கடைசி விக்கெட்டை வீழ்த்தி 9 ரன்களுக்கு 3 விக்கெட். கொல்கத்தாவின் அனைத்து பவுலர்களும் குறைந்தது 10 டாட்பால்கள் வீசினர்.

 

ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலக்கை விரட்டும்போது ஷுப்மன் கில், அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆர்சிபி பவுலிங்கை விளாசித்தள்ளி 10 ஒவர்கள்ல் 94/1 என்று முடித்தனர். ஆர்சிபி மீண்டெழுவது கடினமே. அதுவும் அடுத்து சிஎஸ்கேவுடன் மோதுகிறது, தோனி நிச்சயம் இந்தப் போட்டியைப் பார்த்து அதற்கேற்ப ஆர்சிபி கதையை முடிப்பார் என்று நம்பலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: