• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • KKR vs RCB, IPL 2021| 42/1-லிருந்து 20 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்தோம்: விராட் கோலி

KKR vs RCB, IPL 2021| 42/1-லிருந்து 20 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்தோம்: விராட் கோலி

விராத் கோலி

விராத் கோலி

அபுதாபியில் நடைபெற்ற நேற்றைய 31வது ஐபிஎல் 2021 போட்டியில் கொல்கத்தா அணி ஆர்சிபி அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோல்வி குறித்து விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    விராட் கோலி,  பிரசித் கிருஷ்ணா பந்தில் எல்.பி.ஆகி வெளியேறிய பிறகு படிக்கல், பரத் இணைந்து ஸ்கோரை 41 வரை கொண்டு சென்றனர், ஆனால் அதன் பிறகு படிக்கல், பரத், டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா என்று மார்ச் ஃபாஸ்ட் நிகழ்த்த ஆர்சிபி ஹோப்லெஸ் ஆகி 63/6 என்று ஆனது கடைசி வரை எழும்ப முடியவில்லை. 92 ரன்களுக்கு மடங்கி, கொல்கத்தா 94/1 என்று வெற்றி பெற்றது.

    பேட்டிங்கில் சொதப்பியதோடு இல்லாமல் பவுலிங்கிலும் ஒன்றும் எடுபடவில்லை, ஷுப்மன் கில், வெங்கடேச் ஐயர் என்ற அறிமுக வீரரே முடித்து விட்டுச் சென்றனர். செகல் உலகக்கோப்பை அணியில் இல்லை என்றவுடன் பந்து வீச்சில் தாக்கம் எதுவும் இல்லை, கில் அவரை புரட்டி எடுத்தார். 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் உள்ளது ஆர்சிபி,. இது கொல்கத்தாவுக்கு ஏறுமுகமாக அமைய வாய்ப்புள்ளது, ஆனால் இறங்குமுகமாகாமல் கோலி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இந்நிலையில் ஆட்ட முடிந்தவுடன் விராட் கோலி கூறும்போது, “பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் முக்கியம். போட்டியின் ஆரம்பத்திலேயே பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. 42/1லிருந்து 20 ரன்களில் 5 விக்கெட்டுகள் காலியானது. இது ஒரு எச்சரிக்கை மணி. இது 2வது சுற்றின் ஆரம்பத்திலேயே ஏற்பட்டதால் நல்லது. பேட்டிங் சரியில்லை என்று நீங்கள் கருதலாம், ஆனால் தொழில் பூர்வ கிரிக்கெட் வீரர்களாக சூழ்நிலைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்வோம்.

    அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள சில வேளைகளில் ஒரு போட்டி தேவைப்படும், அது 2 போட்டியாக மாறி விடக்கூடாது. வருண் சக்ரவர்த்தி அபாரமாக வீசினார், இந்தியாவுக்கு ஆடும்போது முக்கியக் காரணையாக திகழ்வார். வருண் சக்ரவர்த்தி இந்தியாவுக்காக விரைவில் ஆடவிருக்கிறார். 8 போட்டிகளில் 5-ல் வென்றுள்ளோம். இங்கும் அங்கும் ஒன்றிரண்டு தோல்விகளை எதிர்பார்த்தோம். அடுத்த போட்டியிலிருந்து வெற்றி பெறுவதற்கான அணி எங்களிடம் உள்ளது. வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்றார் விராட் கோலி.

    Also Read: KKR vs RCB, IPL 2021: டுவெண்டி20ன்னு சொல்லிட்டு 29 ஓவர்ல முடிச்சுட்டாங்க: கோலி மைன்ட் வாய்ஸ்


     Also Read: KKR vs RCB | இரண்டாவது சுற்றில் கம்பேக் கொடுத்த கொல்கத்தா - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி



    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: