• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • KKR vs RCB - கொல்கத்தா-ஆர்சிபி நேருக்கு நேர், ஐபிஎல் 2021 ரெக்கார்ட்- முழு விவரம்

KKR vs RCB - கொல்கத்தா-ஆர்சிபி நேருக்கு நேர், ஐபிஎல் 2021 ரெக்கார்ட்- முழு விவரம்

ஆர்சிபி-கேகேஆர் இன்று போட்டி

ஆர்சிபி-கேகேஆர் இன்று போட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஐபிஎல் 2021 ஆட்டத்தின் முக்கியப் புள்ளி விவரங்கள், நேருக்கு நேர் மோதல் ரெக்கார்ட், பிற புள்ளி விவரங்களை இங்கே அளிக்கிறோம்.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    இந்தியன் பிரீமியர் லீகின் 31வது ஆட்டம் இன்று, 20ம் தேதி அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இதில் பெங்களூரு அணி விராட் கோலி தலைமையில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காரணம் இந்தியாவில் நடந்த முதல் சுற்றில் ஆர்சிபி அணி செம பார்மில் இருந்தது. பாயிண்ட்ஸ் டேபிளில் ஆர்சிபி 3ம் இடத்தில் உள்ளது. மாறாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று 7ம் இடத்தில் பின்னடைவு கண்டுள்ளது.

    ஆனால் ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் இதுவரை மோதியதில் கொல்கத்தா அணியின் கை ஒங்கியுள்ளது. இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 15 முறை வென்றுள்ளது. ஆர்சிப்பி 13 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஐபிஎல் 2021-ல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பதம் பார்த்துள்ளது. 38 ரன்களில் ஆர்சிபி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில்தான் 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார். மேக்ஸ்வெல் 78 ரன்கள் வெளுத்துக் கட்டினார்.

    ஆர்சிபி அணி அந்தப் போட்டியில் 205 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களையே எடுக்க முடிந்தது. கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்நிலையில் இன்று பரபரப்பான இந்தப் போட்டி நடைபெறுகிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்தப் போட்டியைக் காணலாம் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் வர்ணனை வருகிறது.

    கொல்கத்தா அணியின் உத்தேச லெவன்: நிதிஷ் ராணா, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக், டிம் சவுத்தி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி, கம்லேஷ் நாகர்கோட்டி, ஆந்த்ரே ரஸல், சுனில் நரைன், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி

    ஆர்சிபி அணி: விராட் கோலி, வைனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கைல் ஜேமிசன், செகல், சிராஜ், ரஜத் படிதார், பவன் தேஷ்பாண்டே.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: