குவாரண்டைனில் இருந்து டி-காக் ரிட்டர்ன்.. மும்பை vs கே.கே.ஆர் ப்ளேயிங் லெவனில் யாருக்கு இடம்

குவாரண்டைனில் இருந்து டி-காக் ரிட்டர்ன்.. மும்பை  vs கே.கே.ஆர் ப்ளேயிங் லெவனில் யாருக்கு  இடம்

தினேஷ் கார்த்திக் , ரோஹித் ஷர்மா

மும்பை இந்தியன்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

  • Share this:
    நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றிப்பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும். அதேவேளையில் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதே ரிதத்துடன் தொடரவே விரும்பும். இதன்காரணமாக இந்தப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்விரு அணிகளும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் தங்களது முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியதால் பிட்ச் குறித்த புரிதல்கள் ஏற்பட்டிருக்கும். இந்தப்பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்ககூடிய சூழல் உள்ளது. முதல்போட்டியில் வெற்றிப்பெற்ற கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். மும்பை அணிக்கு கட்டாயம் வெற்றிப்பெற வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும்.

    இரு அணிகளுக்கிடையேயான ரெக்கார்டுகளை எடுத்துப்பார்த்தை மும்பை அணியின் கையே ஓங்கியுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இது மும்பை அணி 21 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.

    மும்பை அணியின் உத்தேச பிளேயிங் லவன்

    ரோகித் ஷர்மா, குவிண்டன் டி காக் , இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கிரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா, ட்ரெண்ட் போல்ட், பும்ரா, ராகுல் சாஹர், மார்கோ ஜென்சன்

    குவாரண்டையில் இருந்து குவிண்டன் டி காக் திரும்பியதால் கிறிஸ் லின் பெஞ்சில் உட்காரவைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச பிளேயிங் லவன்

    தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், சுப்மான் கில், நிதிஷ் ரானா, ராகுல் திரிபாதி, ரஸல், ஷாகிப் அல் ஹசன், பேட் கம்மின்ஸ், பிரஷித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி, ஹர்பஜன் சிங்.
    Published by:Ramprasath H
    First published: