• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • KKR vs MI IPL 2021: எங்க வழி அவர் வழி: மும்பையை பந்தாடியது எப்படி?- இயான் மோர்கன் பெருமிதம்

KKR vs MI IPL 2021: எங்க வழி அவர் வழி: மும்பையை பந்தாடியது எப்படி?- இயான் மோர்கன் பெருமிதம்

மோர்கன்

மோர்கன்

ஐபிஎல் 2021- 2வது சுற்றில் கொல்கத்தா அணி பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ளது, இரண்டு பெரிய அணிகளான ஆர்சிபியை அன்று ஊதியதோடு கடந்த ஐபிஎல் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியையும் நேற்று அடித்து நொறுக்கியது கொல்கத்தா நைட் ரைடட்ஸ்.

  • Share this:
    கொல்கத்தா அதிரடிக்குமுன் ஒன்றும் செய்ய முடியாமல் மும்பை சரணடைந்தது குறித்து கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறும்போது, “நாங்கள் இப்படி விளையாடி நீண்ட காலம் ஆகிறது. 2 சீசன்களாக பிரெண்டன் மெக்கல்லம் அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். மும்பை போன்ற வலுவான அணியை கட்டுப்படுத்தி பிறகு இலக்கை இப்படி ஆக்ரோஷமாக விரட்டியது பெரிய தன்னம்பிக்கையை அளிக்கிறது.

    இப்போது நாங்கள் அவர் வழியைப் பின்பற்றுகிறோம், அதுதான் பிரெண்டன் மெக்கல்லம் வழி. வெங்கடேஷ் அய்யரை லெவனில் நுழைக்கப் பாடுபட்டோம், மெக்கல்லம் அவருக்கு ஃபுல் சப்போர்ட். அய்யர் ரன்களை எடுக்கும் விதம் பிரமாதம். எத்தனை போட்டிகள் அவர் ஆடுவார் என்று அவர் மீது எண்களை நாங்கள் வைக்கவில்லை. பயிற்சியாட்டங்களில் அவர் இப்படித்தான் ஆடுகிறார்.

    2வது ஆட்டம்தான் ஆடுகிறார் அதற்குள் அவருக்கு இப்படி ஒரு தன்னம்பிக்கை. சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி நம்பத்தகுந்த பவுலர்கள். கொல்கத்தா அணி கோப்பியை வெல்வதில் சுனில் நரைன் கடந்த காலங்களில் பெரிய பங்களிப்பு செய்துள்ளார். வருண் சக்ரவர்த்தி புதிய வீரர். புதிய சுற்றில் முதல் 2 போட்டிகள் எங்களுக்கு புதிய டெம்ப்ளேட்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Also Read:

     

    இதெல்லாம் ஒண்ணுமில்ல..- கொல்கத்தா கொடுத்த அடி குறித்து ரோகித் சர்மா

    Also Read: KKR vs MI IPL 2021: ‘திரிபாதி அரிவாளை தீட்டிக்கிட்டு வாடா வாடா..’- நாங்கன்னா பயம் வரணும்- கொல்கத்தா அணி புதிய அவதாரம்

    புள்ளிகள் பட்டியலில் மேலே ஏற ஒருவழிதான் இருக்கிறது, அது இந்த வழிதான்” என்று கூறியுள்ளார் இயான் மோர்கன். நேற்று முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 155 ரன்களுக்கு மடங்க, தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 15 ஓவர்களில் 159/3 என்று பின்னி எடுத்தனர், ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 74 ரன்களையும் வெங்கடேஷ் அய்யர் 30 பந்துகளில் 53 ரன்களையும் விளாசித்தள்ளினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: