• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இதெல்லாம் ஒண்ணுமில்ல..- கொல்கத்தா கொடுத்த அடி குறித்து ரோகித் சர்மா

இதெல்லாம் ஒண்ணுமில்ல..- கொல்கத்தா கொடுத்த அடி குறித்து ரோகித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

2 போட்டிகளிலுமே பேட்டிங்கில் மும்பை சொதப்பியது. என்று தான் கூற வேண்டும், பவுலிங் நேற்று என்னதான் நன்றாக வீசினாலும் ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி வேறு ஒரு மூடில் இருந்தனர், அது மெக்கல்லம் வழி, ஜெயசூரியா வழி

  • Share this:
    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யுஏஇ சுற்று ஐபிஎல் 2021 போட்டிகள் சரியான நேரத்தில் ஆரம்பிக்கவில்லை போலும் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வி நேற்று கொல்கத்தா அணி உண்மையில் மும்பையை ஊதித்தள்ளியது என்றே கூற வேண்டும்.

    2 போட்டிகளிலுமே பேட்டிங்கில் மும்பை சொதப்பியது. என்று தான் கூற வேண்டும், பவுலிங் நேற்று என்னதான் நன்றாக வீசினாலும் ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி வேறு ஒரு மூடில் இருந்தனர், அது மெக்கல்லம் வழி, ஜெயசூரியா வழி, ரணதுங்கா தலைமை இலங்கை வழி விரட்டல். ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ரோகித் சர்மா தோல்வி குறித்து சமாளிப்பாக நழுவி உள்ளார்.

    “சில ஏரியாக்கள் தவறாகி விட்டன. நன்றாகத் தொடங்கினோம் பின்னால் கடைசி ஓவர்களில் அடிக்க முடியவில்லை. இது நல்ல பிட்ச்தான். நல்ல தொடக்கத்தை மூலதனமாகத் தவறவிட்டோம். மேலும் தொடக்கத்தில் சரியாக பந்து வீசவில்லை. நான் இந்தத் தோல்வி குறித்து அதிகமாக எதையும் பார்க்க விரும்பவில்லை, இப்படியெல்லாம் நடக்கும் நாம் இதை விடுத்து நகர்ந்து அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.

    நல்ல தொடக்கத்துக்குப் பிறகு கூட்டணிகள் அமைக்க வேண்டும். ஆனால் ரெகுலர் இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தோம். புதிதாக இறங்கும் பேட்டர்களுக்கு இறங்கியவுடனேயே ஷாட்களை ஆடுவது கடினம். கடைசி போட்டியிலும் இதுதான் நடந்தது எனவே இதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. புள்ளிகள் அட்டவணையில் எங்கு இருக்கிறோம் என்பது எப்போதும் சிந்தனையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Also Read: KKR vs MI IPL 2021: ‘திரிபாதி அரிவாளை தீட்டிக்கிட்டு வாடா வாடா..’- நாங்கன்னா பயம் வரணும்- கொல்கத்தா அணி புதிய அவதாரம்

    இன்னும் அட்டவணையின் நடுப்பகுதியில் தான் இருக்கிறோம் எனவே மீண்டு வந்து சில தொடர் வெற்றிகளை பெறுவது அவசியம். கடந்த காலத்தில் நாங்கள் இதே போன்ற நிலைமையிலிருந்து மீண்டு எழுந்துள்ளோம். எனவே இப்போதும் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை நோக்கி பிரயாணிப்போம்.” என்று வழக்கமாக ஒரு பேட்டியை அளித்தார் ரோகித் சர்மா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: