• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 KKR vs DC: தினேஷ் கார்த்திக்கிற்கு வார்னிங் கொடுத்த ஐபிஎல்

IPL 2021 KKR vs DC: தினேஷ் கார்த்திக்கிற்கு வார்னிங் கொடுத்த ஐபிஎல்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் 2021 பிளே ஆப் போட்டியில் ஷார்ஜாவில் நேற்று விரும்பத்தகாத செயலைச் செய்ததாக தினேஷ் கார்த்திக் மீது ஒழுக்க நடத்தை விதி பாய்ந்தது, ஆனால் கடும் எச்சரிக்கையுடன் விடப்பட்டார்.

  • Share this:
    கொல்கத்தா, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் போட்டியில் என்ன நடத்தை விதியை மீறினார் என்பதை குறிப்பாக தெரிவிக்கவில்லை, ஆனால் கொல்கத்தா பேட்டிங்கின் போது 96/0-க்குப் பிறகு 4 பேர் டக் அவுட் ஆகினர், அதில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். அவுட் ஆகிச்செல்லும் போது வெறுப்பில் ஸ்டம்பை தள்ளி விட்டுச்சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகக் குழு தினேஷ் கார்த்திக்கின் ஒழுக்க மீறல் செயலைக் கண்டித்து அவரை எச்சரித்துள்ளது.

    இது தொடர்பான லெவல் 1 குற்றம் என்னவெனில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட பொருட்களை தொந்தரவு செய்தல், சேதம் செய்தல், மைதானத்துக்கு சொந்தமான பொருட்களை சேதம் செய்தல் ஆகியவை அடங்கும், இதில் ஸ்டம்பை உதைப்பது பேட்டை வெறுப்பில் தூக்கி எறிவது பேட்டால் ஸ்டம்பை ஒங்கி அடிப்பது போன்றவை விதிமிறலாகும்.

    தினேஷ் கார்த்திக்கும் தவறை ஒப்புக் கொண்டார். இதற்கு ஆட்ட நடுவர் என்ன தண்டனை கொடுக்கிறாரோ அதை ஏற்க வேண்டும். ஆனால் தினேஷ் கார்த்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷண நேர கோபத்தில் சிலர் இப்படி செய்வதற்கு எச்சரிக்கை அல்லது தண்டனை என்றால் மேட்ச் அதிகாரியான நடுவரை கோலி நேருக்கு நேர் மிரட்டுகிறார் இது என்ன? கோலி என்றால் ஒரு சட்டம், தினேஷ் கார்த்திக் என்றால் ஒரு சட்டமா என்ற கேள்வியே எழுகிறது.

    நேற்று 25 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் 4 பேர் டக்குடன் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்ததே பார்க்கலாம் கொல்கத்தா, கடைசி ஓவரில் அஸ்வின் ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார், 2 பந்துகளில் 6 ரன்கள் என்று கொல்கத்தாவுக்கு கடினமானது.

    Also Read: IPL 2021 KKR vs DC: கண்ணீர் விட்ட ரிஷப் பண்ட், அஸ்வின் பவுலிங் மீது ஸ்ரீகாந்த் வைத்த விமர்சனம்

    ஆனால் சுனில் நரைன் பந்தை டீப்பில் அடித்து கேட்ச் கொடுத்ததால் ராகுல் திரிபாதி பேட்டிங் முனைக்கு வந்தார் இதுதான் முக்கியமான திருப்பம், அஸ்வினின் ஹாட்ரிக் பந்தை திரிபாதி சிக்சருக்கு தூக்க கொல்கத்தா குஷியானது டெல்லி கண்ணீர் விட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: