• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 சீசனில் கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கனின் அதிகபட்ச ஸ்கோர் 8

IPL 2021 சீசனில் கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கனின் அதிகபட்ச ஸ்கோர் 8

இயான் மோர்கன்

இயான் மோர்கன்

ஐபிஎல் 2021 தொடரில் 4 டக் அவுட்டான இயான் மோர்கனின் அதிகபட்ச ஸ்கோர் 8 ரன்கள் தான்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடர் ஐக்கிய அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி வீரர் டூ பிளெசிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து கடினமான இலக்கை துரத்த ஆரம்பித்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் அரைசதம் அடித்தார்கள். ஆனால் டாப் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி வெளியேறியதால் கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் இந்த சீசன் முழுவதும் மோசமாக விளையாடி உள்ளார். ஒரு அணியின் கேப்டன் மற்ற வீரர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்க வேண்டும். ஆனால் இயான் மோர்கன் இந்த சீசனில் எடுத்த அதிகபட்ச ரன்னே 8 தான் ஆகும்.

    நடப்பு சீசனில் நான்கு முறை இயான் மோர்கன் டக் அவுட்டாகி உள்ளார். முக்கியமான இறுதி போட்டியில் மோர்கன் 4 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இயான் மோர்கன் நடப்பு தொடரில் அடித்த ரன்கள் முறைய 2, 7, 7, 0, 0, 7, 8, 0, 2, 2*, 5*, 0, 4. இயான் மோர்கன் 14 போட்டிகளில் பேட்டிங் செய்து மொத்தமாக 44 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் போனதற்கு இயான் மோர்கனின் மோசமான ஃபார்மும் முக்கிய காரணமாகும். கொல்கத்தா அணி தட்டுதடுமாறி தான் இறுதி போட்டிக்கே முன்னேறியது என்பது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: