ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கைரன் பொல்லார்ட்

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கைரன் பொல்லார்ட்

கைரன் பொலார்ட்

கைரன் பொலார்ட்

மும்பை அணி 5 ஐபிஎல் கோப்பைகளும், 3 சிஎல்டி கோப்பைகளையும் பெறுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் கைரன் பொல்லார்ட்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் கைரன் பொலார்ட் மும்பை அணிக்காக கடந்த 13 தொடர்களில் விளையாடிய கைரன் பொலார்ட் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் இம்முறை மும்பை அணியால் தக்கவைக்கப்படமாட்டார் என தகவல் வந்த நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.

  மேலும், அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், மும்பை அணிக்காக விளையாட முடியவில்லை என்றால், வேறு எந்த அணியிலும் தான் விளையாடுவதை நினைத்துப்பார்க்கமுடியவில்லை என தெரிவித்து ஐபிஎல்யில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அவர் அறிவித்துள்ளார்.

  மேலும், மும்பை போன்ற ஒரு வெற்றிகரமான அணியில், கடந்த 13 ஆண்டுகளாக விளையாடியதற்கு தான் மிகவும் பெருமை படுவதாகவும், உலகின் மிகவும் திறமைவாய்ந்த வீரர்களுடன் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டதோடு, மும்பை அணியின் உரிமையாளர்களான முகேஷ் அம்பானிக்கும், நீட்டா அம்பானிக்கும், ஆகாஷ் அம்பானிக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

  இதையும் படிக்க : ஒரே வார்த்தையில் இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்ற பட்லர்

  ஒருமுறை மும்பை அணி வீரர் என்றால் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் வீரர் தான் என குறிப்பிட்ட அவர், மும்பை அணியில் ஒரு வீரராக விளையாட முடியாமல் போனாலும், பேட்டிங் பயிற்சியாளராக தான் அந்த அணியில் தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Pollard