Home /News /sports /

நடராஜனுக்கு பதிலாக ஒரு டி20 போட்டியில் விளையாடிய வீரர் அணியில் சேர்ப்பு

நடராஜனுக்கு பதிலாக ஒரு டி20 போட்டியில் விளையாடிய வீரர் அணியில் சேர்ப்பு

நடராஜனுக்கு பதிலாக ஒரு டி20 போட்டியில் விளையாடிய வீரர் அணியில் சேர்ப்பு

நடராஜனுக்கு பதிலாக ஒரு டி20 போட்டியில் விளையாடிய வீரர் அணியில் சேர்ப்பு

ஐபிஎல் 2021 தெடாரில் ஐதராபாத் அணியில் நடராஜனுக்கு பதிலாக ஜம்மு காஷ்மீர் வீரர் உம்ரன் மாலிக் அணயில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 தொடரின் 2-வது பாதியில் ஹைதராபாத் அணி வீரர் நடராஜன் முதல் வீரராக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். டெல்லிக்கு அணிக்கு எதிரான போட்டிக்கு முன் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடராஜன் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வீரர் விஜய் சங்கர் உட்பட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், கொரோனா தொற்று உறுதியான நடராஜனுக்கு பதிலாக உம்ரன் மாலிக் ஐதராபாத் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஏ பிரிவு மற்றும் டி20 போட்டி ஒன்றில் விளையாடி உள்ளார். உம்ரன் மொத்தம் 4 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். இதுதவிர, ஐதராபாத் அணியின் நெட் பவுலராக இருந்து வருகிறார். எனினும், நடராஜன் குணமடைந்து திரும்பும் வரையே உம்ரன் அணியில் விளையாட அனுமதிக்கப்படுவார்.

    ORANGE CAP:

    நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் போட்டி திட்டமிட்டப்படி நடைபெற்றது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் படுதோல்வி அடைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு தோல்விகரமாகவே அமைந்துள்ளது. சன்ரைசரஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    இதனால் சன்சைர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினமாகவே இருக்கும். எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சன்ரைசர்ஸ் அணியின் ஃப்ளே ஆப் கனவு நிறைவேறும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: IPL 2021, T natarajan

    அடுத்த செய்தி