அமெரிக்க அதிபர் வாக்கு எண்ணிக்கை பரபரப்பான கட்டங்களை கடந்து ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் 6 வருடத்திற்கு முந்தைய ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பழைய ட்வீட்கள் எந்த ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றாலும் அதனுடன் ஒத்துப்போகும். இதனால் அவரை அஸ்ட்ராலஜர் ஆர்ச்சர் என்றே பலரும் அழைத்து வருகின்றனர். எந்த ஒரு நிகழ்வையும் முன்பே கணித்து ட்வீட் போடுவது போல் இருக்கும் இவரது வார்த்தைகள்.
ஐ.பி.எல் 2020 தொடரில் சி.எஸ்.கே வீரர் ரெய்னா திடீரென அணியிலிருந்து விலகி இந்தியா திரும்பினார். இந்த நிகழ்வும் ஆர்ச்சரின் கணிப்பில் தவறாமல் இருந்தது. தற்போது உலகமே உற்று பார்த்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலையும் ஆர்ச்சர் விட்டு வைக்கவில்லை.
ஆர்ச்சர் ஆறு வருடங்களுக்கு முன்பு ஜோ (joe) என்று ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டை அனைவரும் தற்போது வைரல் செய்து வருகின்றனர். ஜோப்ரா போகிறப் போக்கில் எதையாவது சொல்லி வைத்து போகிறார், ஆனால் அதெல்லாம் தற்போது நிகழ்ந்து வருகிறது என்று பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்a