விளையாட்டு

  • associate partner

முதல் பந்திலேயே விக்கெட்.... அசாமிய நாட்டுப்புற நடனமான 'பிஹூ' நடனமாடி கொண்டாடிய ஆர்ச்சர் - வீடியோ

IPL 2020 | ஆர்ச்சர் மற்றும் அவரது அணி வீரர் ரியான்  பராக் ஆகியோர் அசாமிய நாட்டுப்புற நடனமான பிஹு நடனம் ஆடி முதல் விக்கெட்டை கொண்டாடினர்

முதல் பந்திலேயே விக்கெட்.... அசாமிய நாட்டுப்புற நடனமான 'பிஹூ' நடனமாடி கொண்டாடிய ஆர்ச்சர் - வீடியோ
ஜோப்ரா ஆர்சர்
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரின் நேற்றைய போட்டிய துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸின் தொடக்க பேட்ஸ்மேனான பிருத்வி ஷாவை தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஒரு அற்புதமான தொடக்கத்தை வழங்கினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து பேட்டின் நுனியில் பட்டு ஸ்டம்பில் மோதியதால் போட்டியின் முதல்  பந்தில் பிருத்வி ஷா அவுட்டானார். அந்த எதிர்பாராத விக்கெட்டுக்குப் பிறகு, ஆர்ச்சர் மற்றும் அவரது அணி வீரர் ரியான்  பராக் ஆகியோர் அசாமிய நாட்டுப்புற நடனமான பிஹு நடனம் ஆடி முதல் விக்கெட்டை கொண்டாடினர்.

இந்த வீடியொவை இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டரின் தளத்தில், அவர்கள் ஆடிய நடனத்தின் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் துபாய் சர்வதேச மைதானத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் அணியின் கடைசி போட்டியிலும், ராஜஸ்தான் ராயல்ஸின் டிரெஸ்ஸிங் ரூமில் ரியான் பராக் அதே பிஹு நடனத்தை ஆடிக் கொண்டாடினர்.

ஆர்ச்சர் தற்போதைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், 3 விக்கெட் உட்பட 19 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். மேலும் அவர் வீசிய நான்கு ஓவர்களில் 14 டாட் பந்துகளும் அடங்கும். இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள இர்பான் பதான், “இந்த ஐ.பி.எல் போட்டியில், ஒரு ஆங்கிலேயர் தனது பிஹு நடன திறமையை வெளிப்படுத்துவார் என்று நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா! என்று
குறிப்பிட்டுள்ளார்.ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து டெல்லி அணியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, ஹர்ஷல் படேலுக்கு பதிலாக துஷார் தேஷ்பாண்டேவை அழைத்து வந்தார். இந்த போட்டியில் டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading