இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தாததற்கு இதுதான் காரணம் - ஜெய் ஷா விளக்கம்

ஜெய் ஷா

விருத்திமான் சஹா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கொரோனா பாசிடிவ் என வந்ததும் அன்றைய தினமே ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

 • Share this:
  14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சம் காரணமாக பாதியிலேயே தேதி குறிப்பிடாமல் நிறுத்தப்பட்டது. ஐபிஎல் போட்டியை நடத்தவில்லையென்றால் பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை எங்கு எப்போது நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடந்தாண்டு போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதங்களில் போட்டியை நடத்தலாம் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

  இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா தாக்கம் அதிகளவில் இருந்ததால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. போட்டி நடைபெறும் மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணி பட்டத்தை தட்டிச்சென்றது. இந்நிலையில் இந்தாண்டு எஞ்சியுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் நடத்துவது என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

  ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்து ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார். பருவமழை காரணமாக போட்டிகள் மாற்றப்பட்டதாக கூறியுள்ளார். “ காலநிலையை கருத்தில் கொண்டு எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் இங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாது.செப்டம்பர் மாதத்தில் மும்பை, அகமதாபாத் அல்லது வேறு மைதானத்தில் பருவமழையின் போது போட்டியை எப்படி நடத்த முடியும். ” என விளக்கமளித்துள்ளார்.

  கொரோனா தொற்றால் வீரர்கள் பாதிக்கபட்டதும் தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் வீரர் விருத்திமான் சாஹா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சாளர் சந்தீப் வாரியர், அமித் மிஸ்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி என பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். விருத்திமான் சஹா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கொரோனா பாசிடிவ் என வந்ததும் அன்றைய தினமே ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.
  Published by:Ramprasath H
  First published: