Home /News /sports /

வைரலான பும்ராவின் ட்வீட்- என்ன சொல்கிறார்?- ரசிகர்கள் குழப்பம்

வைரலான பும்ராவின் ட்வீட்- என்ன சொல்கிறார்?- ரசிகர்கள் குழப்பம்

பும்ராவின் பூடக ட்வீட் கூறுவது என்ன?

பும்ராவின் பூடக ட்வீட் கூறுவது என்ன?

டீம் இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சனிக்கிழமையன்று ஒரு பூடகமான ட்வீட்டை வெளியிட்டார், இது ரசிகர்களை சமூக ஊடகங்களில் குழப்பமடையச் செய்தது.

    டீம் இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சனிக்கிழமையன்று ஒரு பூடகமான ட்வீட்டை வெளியிட்டார், இது ரசிகர்களை சமூக ஊடகங்களில் குழப்பமடையச் செய்தது. பும்ரா பெங்களூரில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் 2022 ஏலத்தின் போது 2 இமோஜிக்களை தன் ட்விட்டரில் வெளியிட்டதுதான் ரசிகர்களின் குழப்பத்துக்குக் காரணம்.

    28 வயதான பும்ரா மெகா ஏலத்தில் பங்கேற்கவில்லை, ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அவரை ஏற்கனவே 12 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டது. அவர் ட்விட்டரில் ஒரு சிரிப்பு இமோஜியை இடுகையிட்டார், அதைத் தொடர்ந்து ஃபேஸ்பால்ம் இமோஜியை வெளியிட்டார். சுவாரஸ்யமாக, அவர் அந்த ட்வீட்டை இடுகையிட்டபோது, ​​​​வேகப்பந்து வீச்சாளர்கள் ஏலம் நடந்து கொண்டிருந்தது. அணி உரிமையாளர்கள் அவர்கள் மீது பெரும் பணத்தை வாரி இரைத்தனர்.

    ட்விட்டரில் உள்ள ரசிகர்கள் பும்ராவின் ட்வீட்டைச் சுற்றி சில சுவாரஸ்யமான கற்பனைகளையும் ஊகங்களையும் உருவாக்கினர், ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களை 12 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொள்ளும்போது தானும் ஏலத்திற்குச் சென்றிருந்தால் அழகான தொகைக்கு எடுக்கப்படுவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

    பும்ராவின் ட்வீட்டும், ரசிகர்களின் ரியாக்‌ஷனும்:





    தீபக் சாஹர் சக இந்திய பவுலர் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கேவினால் ஏலம் எடுக்கப்பட்டதை நினைத்து பும்ரா ஒருவேளை தானும் ஏலத்தில் வந்திருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, IPL 2022, IPL Auction, Jasprit bumrah

    அடுத்த செய்தி