‘ஜெய் ஜெய் பால்கனி! ’ - சிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்

சுரேஷ் ரெய்னா

விக்கெட்டுகள் ஒருபக்கம் இழந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து அதிரடியில் மிரட்டியது.

  • Share this:
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப்போட்டியில் முதல் பேட் செய்த சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. சென்னைக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளிக்க ரெய்னா- மொயின் அலி இருவரும் சென்னை அணிக்கு நல்ல ஃபார்டன்ர் ஷிப் அமைத்து கொடுத்தனர்.

    விக்கெட்டுகள் ஒருபக்கம் இழந்தாலும் சென்னை தொடர்ந்து அதிரடியில் மிரட்டியது. ரெய்னா தொடர்ந்து சிக்ஸர் வேட்டை நடத்தினார். சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த ரெய்னா ரன் அவுட்டில் வெளியேறினார்.

    இதற்கிடையில் ரெய்னா பேட் செய்துக்கொண்டிருந்த போது விரேந்திர சேவாக் செய்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. “ இதுதான் வித்தியாசம் ஜெய் ஜெய் பால்கனி, இதுவெறும் நகைச்சுவை தான் யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.” கடந்த சீசனில் ரெய்னா சென்னை அணியில் விளையாடவில்லை. உறவினர் கொலை செய்யப்பட்ட காரணத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

     



    ரெய்னாவுக்கு யுஏஏ-வில் பால்கனியுடன் கூடிய அறையை வழங்கவில்லை என்பதால் ரெய்னா கோபித்துக்கொண்டதாகவும் ஒரு பேச்சு எழுந்தது. இந்தப்போட்டியில் சென்னை வீரர்கள் சிக்ஸர்களாக விளாசினார். எதுவாக இருந்தாலும் சேவாக்கின் ஜெய் ஜெய் பால்கனி ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Published by:Ramprasath H
    First published: