பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக கிட்டத்தட்ட வெற்றிக்கு சிஎஸ்கேவை அழைத்துச் செல்லும் 39 பந்து 78 ரன்கள் இன்னிங்ஸை ராயுடு ஆடினார், இதில் 6 சிக்சர்கள் அடங்கும். இது 2019 உலகக்கோப்பையில் ராயுடுவை தேர்வு செய்யாத பொது ராயுடு பதிவிட்ட ட்வீட்டை அவருக்கு நினைவூட்டும் விதமாக வாசிம் ஜாஃபர் கிண்டலடித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக கிட்டத்தட்ட வெற்றிக்கு சிஎஸ்கேவை அழைத்துச் செல்லும் 39 பந்து 78 ரன்கள் இன்னிங்ஸை ராயுடு ஆடினார், இதில் 6 சிக்சர்கள் அடங்கும். இது 2019 உலகக்கோப்பையில் ராயுடுவை தேர்வு செய்யாத பொது ராயுடு பதிவிட்ட ட்வீட்டை அவருக்கு நினைவூட்டும் விதமாக வாசிம் ஜாஃபர் கிண்டலடித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் பவுலர் ரிஷி தவான் முகத்தில் ஷீல்டு ஒன்றை அணிந்திருந்தார், காரணம் அவர் ஒருமுறை ரஞ்சி டிராபியில் அவர் முகத்தில் அடிப்பட்டு விட்டது, அதை தவிர்க்க இது போன்று அவர் அணிந்து பந்து வீசியது அனைவரது கவனத்தை ஈர்த்ததோடு சில தமாஷான மீம்களையும் உருவாக்கியது.
இதை வைத்து ராயுடுவை காமெடி பண்ணி விட்டார் வாசிம் ஜாஃபர். காரணம் என்ன? 2019 உலகக்கோப்பைக்கான அணித்தேர்வின் போது 4ம் நிலைக்கு யார் என்று ஒரு வெட்டி விவாதம் நடந்து அதற்கு ராயுடுதான் சரி என்று அவரைத்தான் எடுக்க வேண்டும் என்று ஒரு புறம் பேச்சுக்கள் புறப்பட தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மிகவும் விசித்திரமாக தமிழக வீரர் விஜய் சங்கரை அணியில் தேர்வு செய்தார், இது பிற்பாடு பெரிய தமாஷானது வேறு கதை.
அப்போது விஜய் சங்கரை 3-டி வீரர் அதாவது த்ரீ டைமன்ஷனல் ஆல்ரவுண்ட் வீரர் என்று வர்ணித்தார், இதை ராயுடு கடுமையாகக் கிண்டல் செய்து
அப்போது தன் ஏமாற்றத்தைப் பதிவு செய்த ராயுடு தன் ட்வீட்டில், ‘2019 உலகக்கோப்பை போட்டிகளைப் பார்க்க புதிய 3-டி கண்ணாடி வாங்க இப்போதுதான் ஆர்டர் செய்தேன்’ என்று விஜய் சங்கர் 3-டி பிளேயர் என்பதைக் குத்திக் காட்டினார் ராயுடு.
அந்த டிவீட்டை இப்போது ராயுடுவுக்கு நினைவுபடுத்திய வாசிம் ஜாஃபர், ’ராயுடு இப்போது இன்னும் ஆக்ரோஷமாக ஆடுவார் ஏனெனில் ரிஷி தவான் அணிந்திருந்த ஷீல்ட் ராயுடுவுக்கு 3-டி கிளாஸை நினைவுபடுத்தியிருக்கும்’ என்று கலாய்த்துள்ளார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.