ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

புகழ்ச்சியா? கிண்டலா?- தோனி பேச்சில் மண்டை காஞ்சுப் போன ஆஸ்திரேலிய வீரர்

புகழ்ச்சியா? கிண்டலா?- தோனி பேச்சில் மண்டை காஞ்சுப் போன ஆஸ்திரேலிய வீரர்

தோனி

தோனி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஐபிஎல் 2021 சாம்பியன்களான தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும்போதும் மற்ற தருணங்களிலும் கேப்டன் எம்.எஸ்.தோனியிடம் தான் கற்றதும் பெற்றதும் என்னவென்பதை வெளிப்படையாக மனம்விட்டுக் கூறியுள்ளார்.

  தி கிரேடு கிரிக்கெட்டர் யூ டியூப் சேனல் உரையாடலில் ஸ்டாய்னிஸ் தனது பேட்டிங் குறித்து தோனியின் கருத்து பாராட்டா அல்லது விமர்சனமா என்று தெரியவில்லை, ஆனால் தான் அதை பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். புகழ்வது போல் பழித்தாரா, பழிப்பது போல் புகழ்ந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் நான் அதை பாசிட்டிவ் ஆக புகழ்ச்சியாகவே எடுத்துக் கொள்கிறேன்.

  எம்.எஸ்.தோனியின் பிலாசபி என்னவெனில், எதிரணி பேட்ஸ்மென் தொடக்கம் முதலே அதிரடி காட்டுகிறார் என்றால் ஒன்று அவர் அடித்து வெற்றி பெற வேண்டும் இல்லையேல் அவுட் ஆக வேண்டும், எனவே அவரை வீழ்த்துவதுக்கான உத்தி வகுப்பார், ஆனால் கடைசி வரை நின்று வெற்றி பெறும் வீரராக இருந்தால் அவரை இறங்கியவுடன் ரன்களுக்கு கஷ்டப்பட வைத்து, ஒரு கட்டத்தில் அந்த பேட்ஸ்மென் ஓகே நான் அடிக்கப் போகிறேன் என்று நினைத்தால் அதைப் புரிந்து கொண்டு பீல்டரக்ளை பின்னால் நிறுத்துவார், இதுதான் தோனி.

  இந்நிலையில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் தோனியிடம் பேசிய அனுபவத்தைப் பகிர்ந்த போது, “தோனி என்னிடம் நேர்மையாக இருந்தார். அவர் என்னை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார். எனக்கு சிஎஸ்கே எப்படி வீசும் என்றும், எனக்கான பீல்டிங் செட்-அப் எப்படி இருக்கும் என்றும் தோனி என்னிடம் வெளிப்படையாகவே கூறினார்.

  அதுதான் என்னைப் புகழ்கிறாரா, அல்லது கிண்டல் செய்தாரா என்று எனக்குப் புரியவில்லை, ஆனால் நான் அவர் கூறியதை புகழ்ச்சியாகவே எடுத்துக் கொள்கிறேன். அதாவது சில வீரர்கள் அதாவது என்னைப் போன்ற வீரர்கள் பொறுப்புடன் கடைசி வரை நின்று ஆடக்கூடியவர்கள் என்றார். சிலர் இறங்கியவுடனேயே அதிரடி காட்டி ஆட்டத்தை கையில் எடுப்பார்கள் அல்லது அவுட் ஆகிச் செல்வார்கள்.ஆனால் தோனி என்னை என்ன கூறினார் என்றால் நான் கடைசி வரை நின்று வெற்றிக்குச் செல்பவன் என்றார்.

  அதனால் எனக்கு இறங்கியவுடன் ரன்களைக் கட்டுப்படுத்தும் பீல்டிங்கை அமைப்பாராம். பிறகு ஸ்டாய்னிஸ் ரன் எடுக்க ஆயத்தமாகி விட்டார், இனி பீல்டர்களைப் பின்னால் நகர்த்துவோம் என்று முடிவெடுப்பாராம். ஆனால் மற்ற வீரர்களுக்கு தான் இப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறிய தோனி, அதற்கான காரணத்தைக் கூறும்போது சில வீரர்கள் எடுத்த எடுப்பிலேயே அடித்து ஆடுவார்கள் தான் அவரை ஆட விட்டு விடுவேன், வெற்றி பெறட்டும் என்று விட்டு விடுவேன், அல்லது ஆட்டமிழந்து போ என்று களவியூகம் அமைப்பேன்.

  என்று தன் கிரிக்கெட் தத்துவத்தை தோனி என்னிடம் தெரிவித்தார். அவருடன் பயிற்சி பற்றி பேசியிருக்கிறேன், தோனி கூறுவது என்னவெனில் நாம் நம் பலவீனத்தைச் சரி செய்யப் பாடுபடவேண்டும், ஆனால் அந்த நடைமுறையில் நம் பலத்தை இழந்து விடக்கூடாது என்பார் அதாவது ஷார்ட் பிட்ச் பந்தை ஆட நன்றாக பயிற்சி அளிப்பார்கள் கோச்கள், ஆனால் இதன் மூலம் ஃபுல் லெந்த் பந்தை ஆடுவதை மறந்து விடுவோம் என்பார் தோனி. தோனியிடம் இவ்வாறு கற்றதும் பெற்றதும் எனக்கு பயிற்சியில் பெரிய அளவில் உதவுகிறது” என்றார் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Dhoni, IPL, IPL 2021, T20 World Cup