Home /News /sports /

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறை: அஸ்வினுக்கு ஏன் இப்படிச் செய்தார்கள்?- சஞ்சு சாம்சன் விளக்கம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறை: அஸ்வினுக்கு ஏன் இப்படிச் செய்தார்கள்?- சஞ்சு சாம்சன் விளக்கம்

அஷ்வின் ரிட்டையர்டு அவுட்

அஷ்வின் ரிட்டையர்டு அவுட்

ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு பிளேயரை ரிட்டையர்டு அவுட் செய்வது, அதாவது நீ ஆடியது போதும் வா என்று அழைத்து விட்டு வேறு வீரரை இறக்குவது, இதை முதன் முதலில் பயன்படுத்திய அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ்.

    ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு பிளேயரை ரிட்டையர்டு அவுட் செய்வது, அதாவது நீ ஆடியது போதும் வா என்று அழைத்து விட்டு வேறு வீரரை இறக்குவது, இதை முதன் முதலில் பயன்படுத்திய அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ். ஆம், அஸ்வின் நன்றாக ஆடி 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு அவுட் செய்யப்பட்டார். ஆனால் இது ராஜஸ்தான் வெற்றிக்குப் பங்களிப்பு செய்தது, இத்தனைக்கும் அஸ்வின் 16வது ஓவரில் கிருஷ்ணப்பா கவுதமை 2 சிக்சர்கள் விளாசி ரன் கதியை துரிதப்படுத்தினார்.

    இது தொடர்பாக ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் கூறும்போது, ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்லாக் ஓவர்களில் ரிட்டையர்டு அவுட் என்று திரும்பப் பெற்றதற்கான முடிவு, போட்டி நிலவரத்தை கருத்தில் கொண்டு அணி நிர்வாகத்தால் செய்யப்பட்ட அழைப்பு என்று கூறினார்.

    ஆனால் இது ராஜஸ்தானுக்கு பயனளித்தது. ஆவேஷ் கான் பந்தில் சிங்கிள் எடுத்தார், அஸ்வின் அப்போது 19வது ஓவரில் அஸ்வினை பெவிலியன் வருமாறு செய்கை செய்தனர், ஆனால் ஷிம்ரன் ஹெட்மையர் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார், இதனையடுத்து ஹெட்மையர் 2 சிக்சர்களை விளாசினார். அஸ்வினுக்குப் பதிலாக இறங்கிய ரியான் பராகும் ஒரு சிக்ஸ் அடித்தார், இந்த முடிவு ராஜஸ்தான் ஸ்கோரை 165 ரன்களுக்கு உயர்த்தியது, கடைய்சியில் வெற்றியில் இந்த முடிவு முக்கியமானதாக மாறியது.

    அஸ்வின் (23 பந்துகளில் 28) ஷிம்ரன் ஹெட்மயர் (36 பந்துகளில் 59 நாட் அவுட்) இணைந்து RR இன்னிங்ஸை மீண்டும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகித்தனர், இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 68 ரன்களை பகிர்ந்து கொண்டனர்

    இந்த முடிவு குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் போட்டி முடிந்ததும் கூறும்போது, “அஸ்வினை ரிட்டையர்ட் அவுட் செய்வது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தின் முடிவு. நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சீசனுக்கு முன்னாடியே இது குறித்து ஆலோசித்தோம். ஏதாவது சூழ்நிலை ஏற்பட்டால், அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தோம். இது ஒரு குழுவின் முடிவு." என்றார் சஞ்சு.

    ஹெட்மையர் கூறும்போது, “எனக்கு அந்த முடிவு பற்றித் தெரியாது, ஆனால் அஸ்வினும் கொஞ்சம் களைப்பாகத்தான் இருந்தார். இது நல்ல முடிவு. அதனால் பராக் எங்களுக்காக ஒரு சிக்சரை அடித்தார்” என்றார் ஹெட்மையர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, R Ashwin, Rajasthan Royals

    அடுத்த செய்தி