அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் ‘யார்க்கர் மன்னன்’ லசித் மலிங்கா அறிவித்ததையடுத்து சக வீரர்கள் அவருடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் என்று அவருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகின்றன.
கிரிக்கெட் உலகிலேயே விநோதமான ஒரு பவுலிங் ஆக்ஷன் உடையவர் என்றால் மலிங்காதான், குறிப்பாக வேகபந்து வீச்சில். மே.இ.தீவுகளில் முன்பு கிளார்க் என்ற ஒரு பவுலர் இருந்தா, இவர் வலது கை வீச்சாளர்தான் ஆனால் பவுலிங்கை முடிக்கும் போது இடது கால் முன்னே வராமல் வலது கால் முன்னே வர வீசுவார், அப்போது அது பெரிய விஷயம். பிறகு மலிங்காதான். பாகிஸ்தானின் சொகைல் தன்வீர் ஆக்ஷனும் விநோதமே, இப்போது பும்ரா சற்றே வித்தியாசமான ஆக்ஷன். ஆனால் இவர்கள் அனைவருமே யார்க்கர்களில் கில்லாடிகள்.
டி20 பேட்டிங்கில் எப்படி கிறிஸ் கெய்லை அடித்துக் கொள்ள முடியாதோ டி20 பவுலிங்கின் முடிசூடா மன்னன் மலிங்கா என்று தயங்காமல் கூற முடியும். ஐசிசியே தன் வாழ்த்துச் செய்தியில், “ஹேப்பி ரிட்டையர்மெண்ட், யார்க்கர் கிங்” என்று விதந்தோதியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் 5 முறை கோப்பையை வெல்ல 4 முறை காரணமாக இருந்த மலிங்காவுடன் வீசியதில் பும்ராவுக்கு அசாத்திய பங்கு உண்டு. அவரும் மலிங்காவை வாழ்த்தியுள்ளார்.
“உதாரணமாகத் திகழும் உங்கள் கிரிகெட்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். மலி உங்கள் அனைத்து எதிர்கால திட்டங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களுடன் விளையாடியது இனிமை மகிழ்ச்சி” என்று லஷித் மலிங்கா பற்றி பும்ரா தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் ‘அனைத்து நினைவுகளுக்கும் நன்றி மலிங்கா” என்று புகழ்ந்துள்ளது.
Also Read: விடைபெற்றார் லசித் மலிங்கா.. அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!
122 ஐபிஎல் போட்டிகளில் மலிங்க 170 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் ஒருமுறை 5/13 என்று வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சு. இலங்கைக்காக 546 விக்கெட்டுகளை அனைத்து வடிவங்களிலும் கைப்பற்றினார் 2007 உலகக்கோப்பையில் இவரது பந்து வீச்சினால் இலங்கை இறுதியில் விளையாடியது, 2011 உலகக்கோப்பையிலும் இவரது பங்களிப்பு ஏராளம், 2014 டி20 உலகக்கோப்பையில் இலங்கையின் வெற்றி கேப்டனும் மலிங்காதான்.
மகேலா ஜெயவர்தனே கூறும்போது, “உன்னை முதன் முதலாக 18 வயது பவுலராக வலையில் சந்தித்தது முதல் நிறைய ஆச்சரியகரமான நினைவுகளை விட்டுச் சென்றுள்ளாய், நன்றி” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.