• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • முகநக நட்பது நட்பன்று...- நொந்து போன வார்னரின் சூசக மெசேஜ்

முகநக நட்பது நட்பன்று...- நொந்து போன வார்னரின் சூசக மெசேஜ்

டேவிட் வார்னர்.

டேவிட் வார்னர்.

ஐபிஎல் 2021 தொடரின் லீக் சுற்றுகளுடனேயே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியேறுகிறது, இந்நிலையில் பெஞ்சிலும் வார்னரைக் காணோம், இதனையடுத்து அவர் சூசகமாக தன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் இந்தியாவில் நடைபெற்ற சுற்றின் போது சர்ச்சைக்குரிய விதத்தில் வார்னர் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டு அடுத்தபடியாக அணியிலிருந்தே நீக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். சன் ரைசர்ஸ் இவர் இல்லையென்றால் கோப்பையை கனவில்தான் வாங்க வேண்டும், வார்னரால்தான் ஒரு முறை கோப்பையை வென்றது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

    இதனையடுத்து வார்னர் இன்ஸ்டாகிராமில் ரகசிய சங்கேத மொழியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், “உங்கள் முகத்துக்கு எதிராக ஒருவர் உண்மையாக இருப்பது அல்ல முக்கியம், உங்கள் முதுகுக்குப் பின்னாலும் ஒருவர் உங்களுக்கு உண்மையாக இருப்பதுதான் முக்கியம்” என்று தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார்.

    ஆனால் இதில் ஒன்றை கவனிக்க வேண்டும், பொதுவாக, முகத்துக்கு எதிராக பேசுவது நேர்மையின், வெளிப்படையின் தன்மை என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோம் அப்படித்தான் நம்புகின்றனர், ஒருவர் முகத்துக்கு நேராக உண்மையாக இருந்து விட்டு முதுகுக்குப் பின்னால் குத்தலாம் அல்லவா, அதனால்தான் வார்னர் முகநக நட்பது நட்பன்று என்று தொனிக்கும் விதமாகக் கூறி பின்னால் குத்தாதீங்கப்பா என்கிறார்.

    யுஏஇ சுற்றில் வார்னர் 2 போட்டிகளில் ஆடி 2 ரன்களையே சேர்த்தார், பீல்டிங்கும் போய் கேட்சையெல்லாம் விட தொடங்கி விட்டார். இதனையடுத்து இவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் கொண்டு வரப்பட்டுள்ளார். ஜேசன் ராயும் ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக பிரமாதமான அரைசதத்தை எடுத்து வெற்றி பெறச் செய்தார்.

    ஆனால் ஜேசன் ராய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக எதிர்பார்த்தது போல் ஆடவில்லை. வார்னரும் அணிக்கு வர வாய்ப்பில்லை சன் ரைசர்ஸும் பிளே ஆஃப் சுற்றுக்கு வர வாய்ப்பில்லை. 2022 சீசனில் பெரிய ஏலம் நடைபெறவுள்ளது. இதில் வார்னர் சன் ரைசர்ஸுக்கு இருப்பாரா என்பது சந்தேகமே, ஐபிஎல் தொடரிலேயே இனி ஆடுவாரா என்பதும் சந்தேகமே.

    இதையும் பாருங்க: IPL 2021 Dhoni| விக்கெட் கீப்பர்னா இவர்தான்! சிஎஸ்கேவுக்காக ‘தல’ தோனி புதிய சாதனை

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: