2011 உலகக்கோப்பை சாம்பியன் அணியின் தொடர் நாயகனான ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் செவ்வாயன்று வெளியிட்ட வீடியோவில் மீண்டும் கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்து களம் காண்பார் என்பது போல் சூசகமான மெசேஜை ரசிகர்களுக்குப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக யுவராஜ் சிங் ஷேர் செய்த வீடியோ ‘இட் இஸ் டைம் ஃபார் மை செகண்ட் இன்னிங்ஸ்’ என்று கூறியுள்ளார், 2வது இன்னிங்ஸுக்குத் தயார் என்று அவர் கூறுவது கிரிக்கெட் மட்டையை மறுபடியும் பிடித்து களமிறங்குகிறாரா, அல்லது புதிய அணியில் எதுவும் பயிற்சியாளராக இணைகிறாரா என்பது சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஐபிஎல்-க்கு வந்துள்ள இரண்டு புதிய அணிகள் அவரை வீரராகவே சேர்க்கிறதா என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும்.
ஏற்கெனவே அவர் சூசகமாக முன்பு தெரிவிக்கும் போது பிப்ரவரியில் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிய வீடியோவில், “It's that time of the year. Are you ready? Do you have what it takes? Have a big surprise for all you guys! Stay tuned!" என்று கேப்ஷன் போட்டுள்ளார் யுவராஜ்.
யுவ்ராஜ் சிங் வீடியோ இதோ:
It's that time of the year. Are you ready? Do you have what it takes? Have a big surprise for all you guys! Stay tuned! pic.twitter.com/xR0Zch1HtU
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 7, 2021
இந்த கிளிப்பில் தனது சாதனைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார், உதாரணமாக ஸ்டூவர்ட் பிராடை 2007 டி20 உலகக்கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசியது.
முன்னதாக தான் திரும்பி கிரிக்கெட்டுக்கு வருவது பற்றி கூறிய யுவராஜ் சிங், “கடவுள்தான் நம் விதியை தீர்மானிக்கிறார். பொதுமக்கள் விரும்பினால் நான் மீண்டும் களம் புகுவேன். பிப்ரவரியில் மீண்டும் நான் வரலாம்” என்று பதிவிட்டிருந்தார்.
Also Read: Ashes 2021: நேர்மையாக விளையாடு- கேரியிடம் தொப்பியை வழங்கி கில்கிறிஸ்ட் உணர்ச்சிகர அறிவுரை
2019-ல் மும்பையில் தன் ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங். 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் 59 டி20 சர்வதேசப் போட்டிகள் என்று அசத்திய யுவராஜ் சிங் போன்ற இன்னொரு வீரரை இன்னும் இந்திய அணி கண்டுப்பிடிக்கவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2022, IPL Auction, Yuvraj singh