ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல் ரோலர் ஒன்றை திருடியதாக கிரிக்கெட் சங்கம் பகீர் குற்றச்சாட்டை சுமத்த மறுத்த பர்வேஸ் ரசூல் தன் மீது திருட்டுப் பட்டம் கட்டுவதா என்று வேதனையுடன் தெரிவித்தார்.
ரோலரைத் திருப்பித் தராவிட்டால் போலீஸ் நடவடிக்கை பாயும் என்று ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் அவர் மீது பாய்ந்துள்ளது. இந்த அபாண்டக் குற்றச்சாட்டை மறுத்த பர்வேஸ் ரசூல் வேதனையுடன், “ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரை இப்படித்தான் நடத்துவதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் துணைக்குழுவில் இருக்கும் அனில் குப்தா பாஜக செய்தித் தொடர்பாளர் ஆவார். அவர் கூறும்போது கிரிக்கெட் வீரர் ரசூல் பெயர் அவர் சேர்ந்த மாவட்டத்தின் பட்டியலில் இருந்தது, அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பினோம் இவருக்கும் போனது அவ்வளவுதான், இது அளவுக்கு மீறி ஊதிப்பெருக்கப்படுகிறது என்றார்.
“நாங்கள் பர்வேஸ் ரசூலுக்கு மட்டும் அனுப்பவில்லை அனைத்து மாவட்ட சங்கங்களுக்குமே அனுப்பினோம்.
உபகரணங்கள் எந்த ஒரு வவுச்சரும் இல்லாமல்தான் மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பப்படுகிறது. எனவே பதிவு செய்யப்பட்ட பெயர் இருந்தால் அவருக்கும் தபால் செல்லும். ஆனால் பர்வேஸ் ரசூல் இதனை தப்பாகப் புரிந்து கொண்டு தன்னை இலக்காக்குவதாக நினைத்துக் கொண்டார்” என்றார்.
ஆனால் அந்தக் கடிதத்தில் நேரடியாக உங்களிடம் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்குச் சொந்தமான உபகரணம் உள்ளது, எனவே கறாரான போலீஸ் நடவடிக்கை எடுக்கும் மும் அதைத் திருப்பித் தரவும் உங்களிடம் உள்ள அனைத்து உபகரணங்களையும் கிரிக்கெட் பொருட்களையும் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திடம் ஒப்படையுங்கள் என்று நேரடியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது, பாஜக செய்தித் தொடர்பாளர் கூறுவது போல் யாராவது எடுத்திருந்தால் என்று இல்லை.
இதற்கு பதில் அளித்த பர்வேஸ் ரசூல், “பர்வேஸ் ரசூலாகிய நான் இந்த மாநிலத்திலிருந்து இந்திய அணிக்காக ஆடிய முதல் வீரன். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் ஆடினேன். துலீப் கோப்பை,தியோதர் டிராபி, இந்தியா ஏ, போர்ட் பிரெசிடெண்ட் லெவன், இரானி கோப்பை ஆடியுள்ளேன், ஜம்மு காஷ்மீர அணிக்கு 6 ஆண்டுகள் கேப்டனாக இருந்திருக்கிறேன்.
பிசிசிஐ-யிடமிருந்து இருமுறை சிறந்த ஆல்ரவுண்டர் விருது வாங்கியிருக்கிறேன். ஆனால் இன்று என் மீது திருட்டுப் பட்டம் சுமத்தப் படுகிறது, ரோலரை திருடி விட்டேன் என்று அபாண்டமாகக் கூறுகிறீர்கள். நான் ஒரு வீரர் கிரிக்கெட் ஆடுபவர், எனக்கும் ரோலருக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டுள்ளார்.
மேலும், “இதுதான் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரை நடத்தும் லட்சணமா? ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட்டுக்காக வாழ்க்கையையும் ஆன்மாவையும் கொடுத்த எனக்கு திருட்டுப் பட்டமா? மாவட்ட வாரியங்களிடம்தான் கேட்க வேண்டுமே தவிர என்னிடம் கேட்பதா?” என்று பொங்கியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Jammu and Kashmir