முகப்பு /செய்தி /விளையாட்டு / 13 போட்டிகளில் வெறும் 196 ரன்களே- மயங்க் அகர்வாலை ஓரங்கட்டுகிறதா பஞ்சாப் கிங்ஸ்?

13 போட்டிகளில் வெறும் 196 ரன்களே- மயங்க் அகர்வாலை ஓரங்கட்டுகிறதா பஞ்சாப் கிங்ஸ்?

மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால் ஐபிஎல் 2022-ல் PBKS அணிக்காக மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 16.33 சராசரி மற்றும் 122.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார் இதனால் அவரை ஓரங்கட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி மாற்று வீரரை களமிறக்கலாம் என்ற செய்திகள் பரவி வர பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அதை மறுத?

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Mumbai, India

மயங்க் அகர்வால் ஐபிஎல் 2022-ல் PBKS அணிக்காக மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 16.33 சராசரி மற்றும் 122.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவரை ஓரங்கட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி மாற்று வீரரை களமிறக்கலாம் என்ற செய்திகள் பரவி வர பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அதை மறுத்துள்ளது.

ஐபிஎல் 2022-ல் மயங்க் அகர்வால், ஒரே ஒரு போட்டியில் மட்டும் 50 ரன்களைக் கடந்தார். அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். ஆனால் 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் முறையே சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக 400 ரன்களுக்கும் மேல் எடுத்திருந்தார். கடந்த சீசனில் சொதப்பலோ சொதப்பல்.

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதவியிலிருந்து விலக்கி மயங்க் அகர்வாலை படிப்படியாக ஓரங்கட்டவுள்ளனர் என்ற செய்தியை பஞ்சாப் கிங்ஸ் மறுத்து வெளியிட்ட தகவலில், "பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன்சி தொடர்பான ஒரு குறிப்பிட்ட ஸ்போர்ட்ஸ் நியூஸ் இணையதளம் வெளியிட்ட செய்தி அறிக்கை, கடந்த சில நாட்களாகப் பரவி வருகிறது. அணியின் எந்த அதிகாரியும் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க: 38 ஆண்டுகால ஆசியக் கோப்பை கிரிக்கெட் வரலாறு : 1984 முதல் 2018 வரை கோப்பையை வென்றவர்கள்

இதனால் ஏற்கெனவே வந்த செய்தியால் ஆடிப்போயிருந்த மயங்க் அகர்வால் இப்போது நிம்மதியாக இருப்பார் என்று தெரிகிறது.

top videos

    ஆனால் பயிற்சியாளர் கும்ப்ளேயை நீக்கப்போவதாக வெளியான செய்திகளை பஞ்சாப் கிங்ஸ் மறுக்கவில்லை என்பதால் கும்ப்ளே நீக்கப்படுவார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது. புதிய பயிற்சியாளர் பதவிக்கு இயான் மோர்கன், ட்ரவர் பெய்லிஸ் ஆகியோருடன் பஞ்சாப் கிங்ஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    First published:

    Tags: IPL, Punjab Kings