• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 5-வது டெஸ்ட் ரத்து பின்னணியில் ஐபிஎல் 2021?

5-வது டெஸ்ட் ரத்து பின்னணியில் ஐபிஎல் 2021?

ஐ.பி.எல்

ஐ.பி.எல்

கொரோனா பாதிப்பினால் ஐபிஎல் 2021 மீதிப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்குவதுதான் மான்செஸ்டரில் 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆட மறுத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது டெஸ்ட்டை ஒத்தி வைத்திருக்கலாம். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டை ஒத்தி வைத்தாக வேண்டும், இது நடக்காத காரியம் என்பதே இந்திய நிலைப்பாடாக இருக்கிறது.

  • Share this:
    கொரோனா பாதிப்பினால் ஐபிஎல் 2021 மீதிப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்குவதுதான் மான்செஸ்டரில் 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆட மறுத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது டெஸ்ட்டை ஒத்தி வைத்திருக்கலாம். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டை ஒத்தி வைத்தாக வேண்டும், இது நடக்காத காரியம் என்பதே இந்திய நிலைப்பாடாக இருக்கிறது.

    5வது டெஸ்ட் ரத்து நாடகத்தின் பின்னணியில் ஐபிஎல் தொடர் இல்லை என்கிறார் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டாம் ஹாரிசன். இந்திய வீரர்களுக்கு கோவிட்-19-ஐ விடவும் அதனால் ஐபிஎல் தொடரில் ஆட முடியாமல் போனால் ஏகப்பட்ட பணம் இழப்பாகிவிடும், டெஸ்ட், ஒருநாள், டி20 சர்வதேச போட்டிகளை விட இந்திய சூப்பர் ஸ்டார்களுக்கு ஐபிஎல் பணமழைதான் அதிக நிதி அந்தஸ்தை கொடுக்கிறது என்பது பலரும் அறிந்ததே.

    ஒருவேளை ஓவல் டெஸ்ட் போட்டியில் தோற்றிருந்தால் எப்படியாவது மான்செஸ்டர் போட்டியில் ஆட இந்திய அணியினர் விழைந்திருப்பார்கள் என்ற பேச்சும் அடிப்பட்டு வருகிறது. ஆனால் பயோபபுள் என்பது ஒரு கொடுமை. வொர்க் ஃப்ரம் ஹோம் மாதிரி அது மிகவும் மனத்தளவில் பெரிய நெருக்கடிகளைக் கொடுப்பது என்பதில் ஐயமில்லை. நீண்ட காலமாக பயோ பபுளில் இருப்பது என்பது இயலாத காரியம், அதனால்தான் பென் ஸ்டோக்ஸ் கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ஹாரிசன் ஐபிஎல் காரணமல்ல என்று மறுக்க, இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக் ஆதர்டன், ஸ்கை ஸ்போர்ட்சில் கூறும்போது, “உண்மையான விவகாரம் ஐபிஎல் தான். வீரர்களுக்கும் அதுதான் கவலை, பிசிசிஐ-க்கும் அதுதான் பிரதான கவலை.” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    Also Read: 5-வது டெஸ்ட் நிலவரம் என்ன?- கைவிடப்பட்டதா? இழக்கப்பட்டதா? ஒத்தி வைக்கப்பட்டதா?
     எது எப்படியானாலும் இந்திய கிரிக்கெட் மீது இது பெரிய களங்கத்தை ஏற்படுத்தி விட்டது, இனி அடுத்த தொடரையெல்லாம் உறுதி செய்த பிறகே இங்கிலாந்து இந்திய அணியை அழைக்கும் அல்லது இந்தியாவுக்கு வரும்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே ஆடுவோம் என்று கூற வாய்ப்புண்டு. இங்கிலாந்து தென் ஆப்பிரிக்க தொடரை ரத்து செய்ததை காரணமாகக் கூறலாம். ஆனால் தொடர் ரத்தானால் காப்பீடு கிடைக்கும் ஆனால் தொடரில் ஒரு மேட்ச் மட்டும் ரத்தானால் இங்கிலாந்துக்கு காப்பீடு கிடைக்காது என்பதே உண்மை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: