Home /News /sports /

Dhoni | ஜடேஜாவுக்கும் ரஷீத் கானுக்கும் தோனி அளித்த ‘பீல்டிங்’ அட்வைஸ் சரியா? - ரஷீத் கான் கூறுவது என்ன?

Dhoni | ஜடேஜாவுக்கும் ரஷீத் கானுக்கும் தோனி அளித்த ‘பீல்டிங்’ அட்வைஸ் சரியா? - ரஷீத் கான் கூறுவது என்ன?

தோனி.

தோனி.

தோனி உலகின் சிறந்த கேப்டன் என்று கொண்டாடப்படுபவர், எந்த ஒரு கேப்டனுக்கும் தன் வீரர்கள் நன்றாக பீல்டிங் செய்ய வேண்டும் என்றே கருதுவார்கள், ஆனால் இதிலும் வித்தியாசம் காட்டி ஜடேஜா, ரஷீத் கானுக்கு ஆச்சரிய அட்வைஸ் புரிந்துள்ளார் தோனி.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஆப்கானிஸ்தானின் உலகின் தரமான டி20 லெக் ஸ்பின்னரும், ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் அணியின் இன்றியமையாத வீரருமான ரஷீத் கான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் கேப்டன்சியில் ஆடுவது தன் கனவு என்று கூறியுள்ளார்.

இப்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர் என்றால் அது ரஷீத் கான் தான். தோனி குறிப்பாக ஸ்பின்னர்களின் கேப்டன். வேகப்பந்து வீச்சின் மீது தோனி அவ்வளவாக நம்பிக்கை இல்லாதவர், ஏனெனில் அவர் ரஞ்சி டிராபி, இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் என்று எதிலும் ஆடாதவர். இந்திய குழிப்பிட்ச்களில் கேப்டன்சி செய்து பழக்கப்பட்டு, வெற்றிகளைக் குவித்த தோனி, உண்மையில் ஸ்பின்னர்களின் கேப்டனாவார்.

குறிப்பாக அவருக்கு லெக் ஸ்பின்னர் என்றால் மிகவும் பிடிக்கும், அதனால்தான் இம்ரான் தாஹிர், பியூஷ் சாவ்லா, கரண் சர்மா போன்றவர்களை தன் அணியில் வைத்திருந்தார். இடது கை ஸ்லோ ஸ்பின் கூட அவருக்குப் பிடிக்கும்.

ரஷீத் கான்.


ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்பின்னர்களை திறம்படக் கையாள்வார் தோனி, அவர்களுக்கான சிறந்த களவியூகத்தை அளிப்பார், பேட்ஸ்மென்களின் கால்நகர்த்தல்களை துல்லியமாகக் கணிக்கும் தோனி, சில வேளைகளில் அடுத்ததாக எதிரணி வீரர் ஆடவிருக்கும் ஷாட்டையும் கணித்து ஸ்பின் பவுலருக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குவது வழக்கம்.

இந்நிலையில் ரஷீத் கான் போன்ற ஒரு ஸ்பின்னர் தோனியின் கேப்டன்சியில் ஆடுவது தன் கனவு என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஷீத் கான், யூடியூப் ஷோ கிரிகேஸ்ட் நிகழ்ச்சியில் கூறியதாவது:

தோனி கேப்டன்சியில் ஆட வேண்டும் என்பது என் கனவு. அவருடன் ஆடும் அனுபவம் முக்கியமானது. ஒரு பவுலருக்கு விக்கெட் கீப்பரின் ஆலோசனை மிக அவசியமாகும். அதுவும் குறிப்பாக தோனி இந்த விஷயத்தில் நிபுணன். அவரை விட பேட்ஸ்மெனைக் கணிக்கும் விக்கெட் கீப்பர் இல்லை.

எங்கள் போட்டிகளை ஆடி முடித்த பிறகு அவருடன் மேற்கொண்ட உரையாடல்கள் பெரிய அளவுக்கு எனக்கு பாடமாக அமைந்தன.

ஜடேஜா


கடந்த முறை அவர் எனக்கு அறிவுரை வழங்கும்போது, ‘பீல்டிங்கில் எச்சரிக்கையாக இரு, அடிக்கடி சறுக்கிக் கொண்டு பீல்ட் செய்கிறாய், தேவையில்லாமல் த்ரோ செய்கிறாய். ஆக்ரோஷமாக ஆகி விடுகிறாய். ஒரு ரஷீத் தான் இருக்கிறார், உன்னை அதிகம் மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். நீ காயமடைந்தால் என்ன ஆகும் என்று யோசித்தாயா? இதை எப்போதும் நினைவில் கொள். ரவீந்திர ஜடேஜாவிடமும் இதைத்தான் நான் கூறுகிறேன்.’ என்று தோனி என்னிடம் கூறியதை நான் மறக்கவில்லை.

இவ்வாறு கூறினார் ரஷீத் கான்.

பீல்டிங் ஒரு கலை, 4 சிக்சர்களை அடிப்பதை விட 25 ரன்களை பீல்டிங்கில் தடுப்பது எதிரணியினரை நிச்சயம் கதிகலங்கச் செய்யும் என்பதே உண்மை. ஒரு கேப்டனாக பீல்டரைப் பார்த்து ஸ்லைட் செய்து பீல்டிங் செய்யாதே, ஆக்ரோஷமாக ஆடாதே என்று கூறும் ஒரே கேப்டனாக தோனி மட்டுமே இருக்க முடியும்!! இவர் கேப்டன்சியில் ஆடுவது தனக்கு ஒரு கனவு என்று ரஷீத் கான் கூறுவது ஆச்சரியம்தான்.
Published by:Muthukumar
First published:

Tags: IPL 2021, MS Dhoni, Rashid Khan, Ravindra jadeja

அடுத்த செய்தி