ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘ஐபிஎல் தொடரில் இவர்தான் சூப்பர் ஸ்டார்…’ – ஏலத்தில் எடுக்கப்பட்ட மும்பை வீரரை பாராட்டும் இர்பான் பதான்

‘ஐபிஎல் தொடரில் இவர்தான் சூப்பர் ஸ்டார்…’ – ஏலத்தில் எடுக்கப்பட்ட மும்பை வீரரை பாராட்டும் இர்பான் பதான்

இர்ஃபான் பதான்.

இர்ஃபான் பதான்.

பிரபல ஆல்ரவுண்டரான இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அடுத்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த ஆட்டக்காரராக இருப்பார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி கொச்சியில் நேற்று முன்தினம் மினி ஏலம் பரபரப்பான சூழலில் நடத்தப்பட்டது.

இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் ரூ. 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மற்றொரு பிரபல ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 17.50 கோடிக்கு விலைக்கு வாங்கியது. கேமரூன் க்ரீனை ஏலத்தில் எடுத்த மும்பை அணியை, முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

புத்தாண்டு ஷாப்பிங் ஹாப்பியா! மீண்டும் ட்ரெண்டிங்கில் காவ்யா மாறன்

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது - ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை தொடரில், கேமரூன் கிரீன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கேமரூன் க்ரீன்

அப்போதே அவர் 20 ஓவர்களில் முக்கிய ஆட்டக்காரராக இருப்பார் என்று எல்லோரும் கணித்தனர்.

ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை எடுத்ததால் தோனி ‘ஹேப்பி’ – சி.எஸ்.கே. நிர்வாகி தகவல்

வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் கேமரூன் க்ரீன் சூப்பர்ஸ்டார் ஆட்டக்காரராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதே போன்று சாம் கரன் தேர்வும் அற்புதமானது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் ஏலத்தில் இடம்பெற்றதை ஆரோக்கியமான சூழலாக கருதுகிறேன். இவ்வாறு இர்பான் பதான் கூறியுள்ளார்

First published:

Tags: IPL