ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Irfan Pathan, Yousuf Pathan | கொரோனா பாதித்த மக்களுக்கு இலவச உணவு: இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் உதவிக்கரம்

Irfan Pathan, Yousuf Pathan | கொரோனா பாதித்த மக்களுக்கு இலவச உணவு: இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் உதவிக்கரம்

இர்பான், யூசுப் பதான் உதவிக்கரம்

இர்பான், யூசுப் பதான் உதவிக்கரம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆல்ரவுண்டர்கள் மற்றும் சகோதரர்களான இர்பான் மற்றும் யூசுப் பதான்கள் தெற்கு டெல்லியில் கொரோனாவால் பாதித்த மக்களுக்கு இலவச உணவை தங்கள் அகாடமி மூலம் வழங்குவதாக புதனன்று அறிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா இரண்டாம் அலையில் டெல்லி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது, நாளொன்றுக்கு 23,000 கொரோனா தொற்றுகள் உருவாகின்றன. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 2.1 கோடியாக அதிகரித்துள்ளது. மரணங்கள் 2.29 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அயல்நாட்டு உதவிகள், தனிநபர்கள், நிறுவனங்கள் என்று இந்தியாவுக்கு கோவிட்-19 உதவிகள் குவிந்து வருகின்றன. இதில் தங்கள் சமூக வலைத்தளத்தில் இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோர் இலவச உணவு பற்றி கூறும்போது, “இந்தியா கொரோனா இரண்டாம் அலைப் பிடியில் சிக்கியிருக்கும் போது நாட்டு மக்களுக்கு உதவுவது எங்களது பொறுப்பு மற்றும் கடமையாகும். இதிலிருந்து உத்வேகம் பெற்ற கிரிக்கெட் அகாடமி ஆஃப் பதான்ஸ், தெற்கு டெல்லியில் கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு இலவச உணவு வழங்க முடிவெடுத்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கான தொலைபேசி எண்ணையும், கூகுள் படிவம் ஒன்றையும் இணைத்துள்ளனர், அதை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொண்டால் இலவச உணவு வீடு தேடி வரும் என்று தெரிவித்துள்ளனர்.

ரோடு சேஃப்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பிறகு இர்பான், யூசுப் பதான்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது.. சச்சின் டெண்டுல்கர், பத்ரிநாத் ஆகியோரையும் கோவிட் விட்டு வைக்கவில்லை.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் பதான் சகோதரர்கள் 4000 முகக்கவசங்களை இலவசமாக அளித்தனர், பதான் தந்தை மெஹ்மூத் கான் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவை தன் அறக்கட்டளை மூலம் அளித்தார்.

இர்பான் பதான் மிகப்பெரிய ஸ்விங் பவுலர், காயத்தினால் கரியர் பாதியிலேயே முடக்கப்பட்டது, டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த ஒரே பவுலர் இர்பான் பதான் தான். அதே போல் யூசுப் பதான் 2011 உலகக்கோப்பையில் ஆடினார், வெற்றி பெற அரிதான சூழ்நிலையிலிருந்து இந்தியாவுக்கு சில போட்டிகளை அவர் வென்று கொடுத்துள்ளார். 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு அனாவசியமாக அவர் டீமை விட்டு தூக்கப்பட்டார். இரு நல்ல ஆல்ரவுண்டர்களை ஒழித்த பெருமை இந்திய அணி நிர்வாகத்தையும் அப்போதைய கேப்டனையுமே சாரும்.

First published:

Tags: Corona Warriors, Irfan Pathan