ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் ஏலத்தில் அயர்லாந்து வீரருக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்.. யார் இந்த ஜோஷ்வா லிட்டில்?

ஐபிஎல் ஏலத்தில் அயர்லாந்து வீரருக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்.. யார் இந்த ஜோஷ்வா லிட்டில்?

ஜோஷ்வா லிட்டில்

ஜோஷ்வா லிட்டில்

IPL 2023 Auction : நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஷ்வா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அயர்லாந்து நாட்டை சேர்ந்த ஜோஸ் லிட்டில் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 4.40 கோடிக்கு விலை போயுள்ளார். பிரபல வீரர்களே குறைந்த தொகைக்கு விற்பனையான நிலையில் ஜோஷ்வா லிட்டிலுக்கு கொடுக்கப்பட்ட விலை கவனம் ஈர்த்து வருகிறது.

ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் அயர்லாந்து வீரர் என்ற பெயரும் ஜோஷ்வா லிட்டிலுக்கு கிடைத்துள்ளது. 23 வயதாகும் லிட்டில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

இவருக்கு அடிப்படை விலையாக ரூ. 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஏலத்தின்போது இவரை எடுக்க அணிகள் ஆர்வம் காட்டின.

20, 25 லட்சங்களாக இவர் மீதான தொகை உயர்த்தப்பட்டு கடைசியில் ரூ. 4.40 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி லிட்டிலை கைவசப்படுத்தியது.

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ரிஷப் பண்ட் - ஷ்ரேயாஸ் இணை... 159 ரன்கள் பார்ட்னர்ஷிப்

சமீபத்தில் நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஷ்வா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். அடிலாய்டில் நடந்த இந்த ஆட்டத்தின்போது 19ஆவது ஓவரை வீசிய லிட்டில், கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர் ஆகிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றினார்.

இந்த 3 பேரும் திறமையான பேட்ஸ்மேன்கள் என்பதால் அவர்களை அவுட்டாக்கிய ஜோஷ்வா லிட்டில் கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டார்.

உலகக்கோப்பை டி20 தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றிய 6ஆவது பவுலர் என்ற சாதனையை இந்த போட்டியில் ஜோஷ்வா லிட்டில் ஏற்படுத்தியிருந்தார்.

18 வயது வீரரை ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்… யார் இந்த நிஷாந்த் சிந்து?

உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய லிட்டில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் இவரது எகானமி 7.34 ஆக உள்ளது. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் (வலைப் பயிற்சி) பவுலராக ஜோஷ்வா லிட்டில் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: IPL