தோனி ஃபினிஷஸ் ஆஃப் ஹிஸ் ஸ்டைல்... மைதானம் முழுவதும் அதிர்ந்த பெயர் மாஹி.. தல.. தோனி.. பாயிண்ட்ஸ் டேபிள்ல கடைசி 2 இடத்துல இருக்குற டீம் மோதின போட்டி.. ஐபிஎல் போட்டியில் யார் வேணும்னாலும் கப் அடிக்கலாம்.. ஆனா இந்த இரண்டு டீம்-க்கும் இருக்குற மாஸ் வேற எந்த டீமுக்கு கிடையாது.. CSK VS MI மேட்ச்ன்னா சொல்லவா வேணும். சமூகவலைத்தளத்தில் இரண்டு அணி ரசிகர்களும் ஃபயர் கமெண்ட்களை பாஸ் செய்துக்கொண்டிருந்தனர். இங்க யாரு வேணும்னாலும் பாஸாக இருக்கலாம் ஆனா மாஸ்-ன்னா இவங்க ரெண்டு பேரும் தான். ஏன்னா வரலாறு அப்படி..
இவங்க களத்துக்கு வந்தாலே கச்சேரி தான். அதுபோலத்தான் நேற்றைய போட்டியும் எதிர்ப்பார்ப்பில் எகிறியது. முதல் ஓவரிலே சிஎஸ்கே பவுலர் முகேஷ் செளத்ரி செக் வைக்க.. ரோஹித், இஷான் டக் அவுட்டில் வெளியேறினர். சென்னை ஆரம்பத்தில் சீற பொறுப்பை உணர்ந்து அடக்கி வாசித்த சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா.. ரன்களை திரட்டினர்.. அங்கு வேறு யாரும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. பொல்லார்டை பொறிவைத்து தூக்கியது சிஎஸ்கே.. இன்னமும் அதே கேம் ப்ளான் தான். ஓரளவுக்கு சமாளித்த மும்பை 155 ரன்களை திரட்டியது.
156 தான் டார்கெட், போன மேட்சில் ருத்ராஜ் கெய்க்வாட் சாத்தி இருந்ததால்.. சிஎஸ்கே ரசிகர்கள் கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த மாதிரி எல்லாம் உங்கள யார் நம்ப சொன்னா அப்படின்னு முதல் பந்திலே கைமேல் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ருத்ராஜ். சம்பந்தம் இல்லாமல் மிட்செல் சாண்ட்னர் வந்தார் 11 ரன்னில் நடையை கட்டினார். கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ராபின் உத்தப்பாவும் 30 ரன்களில் பெவிலியன் போனார்..
மாயாஜாலக்காரர் போல் சாம்ஸ் பந்துவீசும் போது எல்லாம் விக்கெட் எடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்தார். சிஎஸ்கே ஆடிய டாட் பால்களை பார்த்து நல்லா போற மேட்சை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்கன்னு பார்த்தீங்களான்னு ரசிகர்கள் நொந்துக்கொண்டனர். பும்ரா பந்தை கையில் எடுக்கும்போதெல்லாம் மும்பை ரசிகர்களுக்கு முறுக்கேறியது.
சிஎஸ்கே தவறவிட்ட கேட்ச்கள் கேமை மாற்றுமா.. சிஎஸ்கே வீரர்களின் டாட் பால்கள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப்போகுது.. யார்கரில் மிரட்டும் பும்ரா இருக்கும் போது என்ன நடக்கும் என கடைசி 5 ஓவரில் பரபரப்பு எகிறியது.. சாதாரண மேட்சுக்கே ரசிகர்களை சீட்டு நுனிக்கு கொண்டு வரும் சிஎஸ்கே பற்றி சொல்லவா வேணும்.. கடைசி வரை பேட்டிங் லைனப் இருக்குன்னு வர்ணையாளர்கள்தான் கொஞ்சம் ஆறுதல் வார்த்தை பேசினார்கள்.. கேப்டன் ஆஃப் தி ஷிப் கையில் கேட்ச் கொடுத்து வெளியே போனார்.. களத்துல ஃபினிஷர் தோனி இருக்கார்.. கண்ண மூடி சுத்தும் ப்ரோவா மேட்ச் மாத்துவாறு ஆறுதலை அள்ளி வீசிக்கொண்டிருந்தார். ஸ்டார் ஸ்போட்ஸ் தமிழ் கமெண்ட்ரியில் இருந்த பத்ரிநாத் ( நன்றி தலைவா).
கடைசி ஓவர் 17 ரன் தேவை.. ஒரே ஆறுதல் என்னவென்றால் பந்து பும்ரா கையில் இல்லை ஜெய்தேவ் உனட்கட் கையில்.. மீடியம் பேசர் தான் இப்பவும் அந்த பத்ரிதான் நம்பிக்கை கொடுத்தார். பிரிட்டோரியஸ் பும்ரா பந்தில் 2பவுண்டரி விளாசியதால் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. அந்தப்பக்கம் தோனிஆறுதல். முதல்பந்து எல்.பி.டபிள்யூவில் வெளியேறினார் பிரிட்டோரியஸ். ரன் இல்லை விக்கெட் காலி கண்ணத்தில் கைவைத்தனர் சிஎஸ்கே பேனஸ்.. மும்பை ரசிகர்கள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் லைட் எரிந்தது. களத்துக்கு வந்தார் ப்ரோவா.. சிங்கிள் தட்டி தோனி கையில் மேட்சை கொடுத்துவிட்டு போனார்.
உனட்கட்டை முன்பு தோனி பொளந்துகட்டிய வீடியோவை போட்டு ஆறுதல் கூட்டினர் லைவ் செய்த டிவி நிறுவனத்தினர். 4 பந்துக்கு 16 என்பதால் வர்ணணையாளர்கள் கொஞ்சம் அடக்கியே வாசித்தனர். பழைய தோனி இல்ல இருந்தாலும் தோனி தோனித்தான் என முட்டுக்கொடுக்க முயன்றனர். உனட்கட் வருகைக்காக காத்திருந்த தோனி தன்னுடைய ப்ளாணை பக்காவாக எக்ஸிக்யூட் செய்தார். தோனிக்கு ரோஹித்தே ரோட் மேப் போட்டு கொடுத்தது போல் இருந்தது. வேகம் இல்லாத அவரது 3-வது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் அந்த ஆகாய சூரன் தோனி.. ஒரு நிமிடம் மைதானமே அதிர்ந்தது. ஹீரோ இண்ட்ரோடக்ஷன் போல் துள்ளி குதித்தனர் சிஎஸ்கே பேன்ஸ்.. தலைவா மேட்ச் மட்டும் முடிச்சு கொடு என்பதாக இருந்தது சிஎஸ்கே வீரர்களின் மைண்ட் வாய்ஸ்.
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா என KGF மோடில் ரசிகர்கள் கூச்சலிட்டனர். உனட்கட் பாவம் என்ன பண்ணுவார் அவருக்கு இருக்கும் வேகத்துல தான பந்து போட முடியும். வேகம் இல்லாமல் எதோ நானும் போடுறேன்னு ஒரு பவுன்சர் ட்ரை பண்ண இதைத்தான் எதிர்ப்பார்த்தேன் என வெயிட் பண்ணி பவுண்டரி தட்டினார் தோனி.. 5-வது பந்தில் ரெண்டு ரன். கடைசி ஒரு பந்துக்கு 4 ரன்.. ஏற்கனவே உனட்கட் கன்னத்தில் கைவைத்துவிட்டார். முகமெல்லாம் வேர்த்து விட்டது. ஓடிவந்து லோ புல் டாஸாக வீச வலைவிரித்து ஃபீல்டர்கள் எல்லாம் வலைக்குள் காத்திருக்க சிரமமே இல்லாமல் தோனி பேக்வேர்ட் ஸ்கோயர் லெக்கில் தட்டி பவுண்டரி எடுத்தார். தோனி ஃபினிஷஸ் ஆஃப் ஹிஸ் ஸ்டைல்.. என அதிர்ந்தது அரங்கம்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Dhoni, Dhoni batting, IPL 2022, Mahendra singh dhoni, MS Dhoni