• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • PBKS | 2015 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடரும் சோகம்.. இப்படியும் ஒரு சா(வே)தனை..

PBKS | 2015 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடரும் சோகம்.. இப்படியும் ஒரு சா(வே)தனை..

Punjab Kings

Punjab Kings

பஞ்சாப் அணி கடந்த 2014ம் ஆண்டு சீசனில் இரண்டாவது இடம் பிடித்திருந்தது, அதன் பிறகு அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் திணறி வருகிறது.

  • Share this:
நடப்பு ஐஎபில் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் சோகமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறது.

2021 ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் (அக்டோபர் 9) முடிகிறது. நாளை முதல் முதல் பிளே ஆஃப் சுற்று தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையேயான மோதல் நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை, டெல்லி தவிர்த்து விராட் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் தகுதி பெற்றிருக்கின்றன. இவ்விரு அணிகளும் வரும் திங்களன்று கோதாவில் இறங்க உள்ளன.

PBKS சோக சாதனை:

இதனிடையே கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி இந்த ஆண்டு மொத்தம் உள்ள 14 லீக் ஆட்டங்களில் ஆறில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடம் பிடித்து, மீண்டும் ஒரு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போயிருக்கிறது. இதன் மூலம் மிகவும் பரிதாபத்திற்குரிய சாதனை ஒன்றுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி சொந்தக்காரராக மாறியிருக்கிறது.

Also Read:   7.20 லட்சம் கிமீ நீள வாலுடன் உலவும் மர்மப் பொருள் - விண்வெளியில் ஒரு அற்புதம்!

தொடர்ச்சியாக 7 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போயிருக்கும் பஞ்சாப் அணி, ஐபிஎல் வரலாற்றில் அவல சாதனையை தன்வசமாக்கியிருக்கிறது. முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தொடர்ச்சியாக 6 முறை ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கையை 7 ஆக மாற்றியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

2015 முதல்...

பஞ்சாப் அணி கடந்த 2014ம் ஆண்டு சீசனில் இரண்டாவது இடம் பிடித்திருந்தது, அதன் பிறகு அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் திணறி வருகிறது. 2008ம் ஆண்டு நடைபெற்ற முதல் சீசனில் பஞ்சாப் அணி செமி ஃபைனல் வரை முன்னேறியது. 2008ம் ஆண்டுக்கு பிறகு 2014ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 சீசன்களிலும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தான் இருந்தது.

Also Read:  பிரசாந்த் கிஷோர் ட்வீட்டால் வந்த வினை.. மம்தாவை விமர்சித்த காங்கிரஸ்.. ராகுலை விமர்சித்து திரிணாமுல் பதிலடி!

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2013 முதல் 2018 சீசன் வரை தொடர்ச்சியாக 6 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்குதகுதி பெறாமல் இருந்தது. ஆனால் தோல்விப்பாதையில் இருந்து மீண்டும் 2019 மற்றும் 2020 சீசன்களில் அந்த அணி முறையே மூன்று மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்தது.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளாக உள்ளன. ஆனால் இம்முறை டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பதால் இந்த நிலை மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: