நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலத்தில் முதல் நாளிலேயே ரூ.43 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. அதாவது 4 பிரிவுகளில் 2 பிரிவுகளுக்கான ஏலம் மட்டுமே இன்று முடிந்துள்ளது. "பேக்கேஜ் 1" சுமார் ரூ 23, 370 கோடி ரூபாய்க்கும் , "பேக்கேஜ் 2" ரூ. 19, 680 கோடிக்கும் ஏலம் போயுள்ளது. இனி ஐபிஎல்-ம் ஒவ்வொரு போட்டியும் ரூ.105 கோடி மதிப்புடையதாகிறது. அமெரிக்க நேஷனல் ஃபுட் பால் லீகிற்கு அடுத்த படியாக ஐபிஎல் தான் இப்போது உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடங்கிய ஐபிஎல் தொடர் தற்போது பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்ற ஒவ்வொரு முறையும் கடும் போட்டி நிலவுகிறது. முதல் 10 ஆண்டுகளில் சோனி பிக்சர்ஸ் குழுமம் ரூ.8200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது . அதை தொடர்ந்து கடந்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா, டிஷ்னி நிறுவனம் ஆகியவை தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பெற்றது.
2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்க இருக்கிறது. ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் உரிமை இல்லாத ஒளிபரப்பு உரிமை, அதாவது முதல் போட்டி, 4 ப்ளே ஆஃப், டபுள் ஹெட்டர் போட்டிகள் அடங்கும், உலக நாடுகளுக்கான ஒளிரபப்பு உரிமை என 4 பிரிவுகளில் வழங்க பிசிசிஐ வழங்குகிறது.
இந்த நிலையில் இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து மீடியா ரைட்ஸ் வருவாயையும் தூக்கிச் சாப்பிட்டுள்ளது ஐபிஎல் மீடியா ரைட்ஸ். கடந்த ஐபிஎல் தொடரின் மீடியா ரைட்ஸின் படி ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு ரூ.54.23 கோடி. இப்போது ரூ.105 கோடியாக அதிகரித்துள்ளது.
ஏலதாரர்கள் சோனி, டிஸ்னி-ஸ்டார், வயாகாம்-ரிலையன்ஸ், ஸீ, ஃபன் ஏசியா, சூப்பர் ஸ்போர்ட், டைம்ஸ் இண்டெர்னெட் ஆகிய மெகா நிறுவனங்களாகும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.