• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பெங்களூருவின் வெற்றி பயணம் தொடருமா? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்!

பெங்களூருவின் வெற்றி பயணம் தொடருமா? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்!

பெங்களூர் அணி

பெங்களூர் அணி

ஐதராபாத் அணியை பொறுத்தவரை இந்த தொடர் முழுவதுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக மட்டுமே அந்த அணி வெற்றியை பதிவு செய்தது.

  • Share this:
    நடப்பு ஐபிஎல் தொடரின் 52-வது லீக் போட்டி அபுதாபியில் இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்த பெங்களூரு அணி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஐதராபாத் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

    தொடரின் இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் பெங்களூரு அணி சற்று சரிவை சந்தித்தாலும், பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது.

    அணியின் அசைக்க முடியாத ஆல்-ரவுண்டராக மேக்ஸ்வெல் திகழ்கிறார். இதேபோல் சுழலில் யுஸ்வேந்திர சஹலும், வேகத்தில் ஹர்ஷல் படேலும் எதிரணியை மிரட்டி வருகின்றனர். இது தவிர்த்து கோலி, படிக்கல், டி வில்லியர்ஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் பெங்களூரு அணிக்கு வலு சேர்க்கின்றனர். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டாலும், இனிவரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஒன்றை பெங்களூரு கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் அவர்களுக்கு முக்கியமானதாகவே உள்ளது.

    ஐதராபாத் அணியை பொறுத்தவரை இந்த தொடர் முழுவதுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக மட்டுமே அந்த அணி வெற்றியை பதிவு செய்தது.

    இதையும் படிங்க: இஷான் கிஷன் சூறாவளி ஆட்டம்- ராஜஸ்தானை 8 ஓவரில் வீழ்த்திய மும்பை அணி!


    ஆடும் லெவனை எப்படி மாற்றியமைத்தும் அது ஐதராபாத்துக்கு கை கொடுக்கவில்லை. புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷித் கான், ஜேசன் ஹோல்டர் என சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் வலுவான பேட்டிங் வரிசை இல்லாமல் ஐதராபாத் தவித்து வருகிறது. கேப்டன் கேன் வில்லியம்சனாலும் பேட்டிங்கில் சோபிக்க முடியவில்லை என்பதைதான் மனம் ஏற்க மறுக்கிறது.

    மேலும் படிக்க: ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிய சிஎஸ்கே முக்கிய வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி


    அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்க உள்ள சூழலில் ஐதராபாத் அணி தக்க வைக்க ஒரு வீரர் கூட இல்லை என்பது மிகவும் துரதிஷ்டமானது. இன்றைய போட்டியில் தோற்றால் அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் வென்றால் பெங்களூரு அணிக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்த முடியும்.

    இரு அணிகளும் இதுவரை 19 முறை நேருநேருக்கு நேர் மோதியதில் 10-ல் ஐதராபாத்தும் 8-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: