• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோலிக்கு முதிர்ச்சியே இல்லை, சிக்ஸ் அடித்ததற்கெல்லாம் முஷ்டி உயர்த்துகிறார்: மைக்கேல் வான்

கோலிக்கு முதிர்ச்சியே இல்லை, சிக்ஸ் அடித்ததற்கெல்லாம் முஷ்டி உயர்த்துகிறார்: மைக்கேல் வான்

விராத் கோலி

விராத் கோலி

கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதிர்ச்சியற்ற தன்மையை மைக்கேல் வான் சுட்டிக்காட்டி மீண்டும் கோலியை சீண்டியுள்ளார்.

  • Share this:
    கோலி அனைத்தையுமே கொண்டாடும் ஒரு உற்சாக மனநிலை உள்ள வீரர். டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அவர் உண்மையிலேயே ஒரு சிறிய பையன் என்ற மனோபாவத்தில் ரசிகராக மாறி தன் அணியின் சிக்ஸ், பவுண்டரி என்று அனைத்தையும் கொண்டாடும் வழக்கமுள்ளவர். இந்நிலையில் மைக்கேல் வான் சிக்ஸ் அடித்ததையெல்லம் கொண்டாடுகின்றனர், முஷ்டி உயர்த்துகின்றனர், இது என்ன முதிர்ச்சியற்ற மனநிலை என்று சாடியுள்ளார்.

    பொதுவாகவே இந்திய அணியையும் குறிப்பாக விராட் கோலியையும் அடிக்கடி சீண்டி வருகிறார் மைக்கேல் வான். ஒரு கட்டத்தில் பார்த்திபன் - வடிவேலு கூட்டணி காமெடி போல் இது ஆகிவிட்டது. நிச்சயம் ஒரு கட்டத்தில் கோலி வடிவேலு போல், “ஏய் இதப்பாரு எப்பப்பார்த்தாலும் இதே வேலையா திரியுற நீயி” என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கிலை.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் விராட் கோலி 9வது ஓவரில் கே.எஸ்.பரத் அடித்த சிக்சருக்கு முஷ்டி உயர்த்திக் கொண்டாடினார். ராகுல் சாகர் பந்தை ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸ் அடித்தார் பரத். அடுத்த பந்தே பெவிலியன் திரும்பினார் பரத், இப்படி அடுத்த பந்து என்னாகும் என்று தெரியாமல் முதிர்ச்சியற்று முதல் பந்து சிக்சை அதுவும் 9வது ஓவரில் கொண்டாடலாமா, சுத்தப் பைத்தியகாரத்தனமாக இருக்கிறதே என்கிறார் மைக்கேல் வான்.

    “நான் நேர்மையாக கூறிவிடுகிறேன். நான் ஏதோ வேண்டுமென்றே அவர்களைக் குறை கூறவில்லை நடந்ததைத்தான் கூறுகிறேன். 9வது ஓவரில் ஒருவர் சிக்ஸ் அடிக்கிறார் என்றால் அதற்கு ஏன் முஷ்டியை உயர்த்த வேண்டும் என்று கேட்கிறேன். சிக்ஸ் அடிப்பது தான் உன் வேலை இதை என்ன கொண்டாட வேண்டியிருக்கிறது? ஆட்ட முடிவில் வெற்றி பெறும்போது முஷ்டியை உயர்த்துகின்றனர்.

    தவறான தருணங்களில் ஆர்சிபி அணி கொண்டாட்டம் போடுகின்றனர். இதில் முதிர்ச்சியில்லை. 8வது ஓவரோ, 9வது ஓவரோ யாராவது சிக்ஸ் அடித்தால் அதைக் கொண்டாடுவதா? ஆம் ஆர்சிபி அணி தனித் தனி வீரர்களாக இருக்கிறதே தவிர, ஒரு அணியாகத் திரண்டு கூட்டு முயற்சியில் ஆடுவதில்லை” என்றார் மைக்கேல் வான்.

    Also Read: RCB vs MI IPL 2021: கொஞ்சம் விட்டால் பும்ரா நம்மை ஏறி மிதித்து விடுவார்: விராட் கோலி

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: