முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஐபிஎல் தொடரில் அர்ஷ்தீப் சிங் கவனம் பெறுவார்’ – அனில் கும்ப்ளே நம்பிக்கை

‘ஐபிஎல் தொடரில் அர்ஷ்தீப் சிங் கவனம் பெறுவார்’ – அனில் கும்ப்ளே நம்பிக்கை

அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங்

மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள பவுலர் அர்ஷ்தீப் சிங் கவனம் பெறுவார் என்று அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதயில் தொடங்கவுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் வலுவான அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

நடப்பு சீசனில் விளையாடும் அணிகள் குறித்து ஜியோ சினிமா நடத்திய கலந்துரையாடலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கிறிஸ்கேல், பார்த்திவ் படேல், அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, ஸ்காட் ஸ்டைரிஸ், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அனில் கும்ப்ளே பேசியதாவது- கடந்த சில மாதங்களாக அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். வேகப்பந்து வீச்சாளராக அவரது வளர்ச்சி அற்புதமாக உள்ளது. அவரது வளர்ச்சி இந்தியாவுக்கு நல்லதாக அமையும். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பவுலர்களில், எதிர்கால நட்சத்திரமாக அர்ஷ்தீப் சிங் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.  இந்த தொடரில் பலரது கவனத்தை அவர் பெறுவார்.

பேட்டிங்கை பொருத்தளவில் இஷான் கிஷனின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. அவர் மும்பை அணிக்காக இந்த சீசனில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023